பெருமை PRIDE கேம்ப்பெல்ஸ்வில்லே, கென்டக்கி, அமெரிக்கா 55-08-07A .....மெதோடிஸ்டுகளும் தண்ணீருக்கு பயந்தவர்கள் அல்ல என்பதை நான் அறிவேன். எனவே மழை பெய்தாலும் பெய்யா விட்டாலும், அது இருக்கிறபடியே அவர்கள் வெளியே வந்து கூடாரத்தில் அமர வருகின்றனர். பாப்டிஸ்டுகள் தான் அது போன்றவர்கள் என்று நான் நினைத்தேன், ஆனால் மெதோடிஸ்டுகளும் அப்படித்தான் என்பதை நான் காண்கிறேன். இந்த பிற்பகலில் இவ்வாராதனையில் இருப்பதற்காக மகிழ்கிறேன். புயல்காற்று வீசிய போது, நான் தங்கியிருந்த விடுதியின் ஜன்னலின் வழியே நான் வெளியே பார்த்து, "ஓ, என்னே. சாத்தானே. ஏன் இந்த தீங்கை செய்கிறாய்-? என்றேன். "இந்த இரண்டு ஆராதனைகளுக்காகவே இங்கே இருக்கிறேன். ஆனால் பின்பு நீயோ மழையை அனுப்புகிறாய்" என்றேன். நல்லது, "கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது" என்று அவர்கள் உரிமை கோருகின்றனர். எனவே அது குளிர்ச்சியாக்கி இருக்கிறது, எனவே நீங்கள் விசிறி - - விசிறி கொண்டிருக்க தேவையில்லை. எனவே, மேலும் விவசாயிகளுக்கு மழை தேவைப்படுகிறது என்று எனக்கு புரிகிறது, ஆகவே அதை எல்லா கோணங்களிலும் பார்ப்பதில் நாங்கள் மகிழ்கிறோம். 2. எனவே இங்கே சில நண்பர்களை சந்திப்பதில் மகிழ்கிறேன், சற்று நேரத்திற்கு முன்னர், திரு மற்றும் திருமதி.செப்-ஸ்மித், அவர்களுடைய பண்ணையில் தான் நாங்கள் வளர்க்கப்பட் டோம். சரியாக இங்கே தான், கொஞ்ச தூரத்திலிருக்கும் மலை தொடர்ச்சியின் மேடுகளில், திரு மற்றும் திருமதி ஸ்மித் இங்கே மூலையில் அமர்ந்திருக்கின்றனர். நான் ஒரு சிறு பையனாய் இருந்த போது, அவர்கள் என்னை பார்த்துக் கொண்டனர் என்று நான் நினைக்கிறேன். இந்தியானாவிற்கு செல்வதற்கு முன்னர், நான் ஒரு சிறு - சிறு பிள்ளையாய் இருந்த போது, திரு ஸ்மித்திடம் என் தந்தை வேலை செய்தார் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய நண்பர்கள் மெக்ஸ்பேடன்ஸும் மற்றவர்களும் இருக்கின்றனர். தேசத்தின் இந்த பகுதியை சேர்ந்த மற்றுமொரு மெதோடிஸ்ட் பிரசங்கி, திரு ஜான் ஓ பெனன் இருக்கிறார். நிச்சயமாக அவரை உங்களுக்கு தெரியும், நீலநிற கோட் அணிந்து இங்கே அமர்ந்து இருக்கிறார். அவர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர், அவர் லூயிவில், கென்டக்கியிலிருந்து வந்திருக்கிறார். இப்பொழுது அவர் லூயிவில்லில் ஒரு வர்த்தக புருஷராக இருக்கிறார். அம்மா இங்கே இருக்கிறார்களா என்று திருமதி ஸ்மித் கேட்டார். அங்கே வெளியே ஒரு காரை நான் பார்த்தேன் என்று நினைக்கிறேன். என் தாயார் இங்கே இருக்கிறார்களா-? அதை குறித்துதான் நான் ஆச்சரியப்படுகிறேன். ஒரு வேளை-ஒரு வேளை என் தாயார் இங்கே இருக்கிறார்களா என்று ஒரு வேளை என் தாயார் இங்கே வந்தால் அவர்களை அழைத்து வரும் சீமாட்டியின் கார் போன்று இருக்கும் ஒரு காரை நான் பார்த்தேன், எனவே திருமதி ஸ்மித்திடம் ஒரு வேளை என் தாயார் இங்கே இருக்கலாம் என்று கூறினேன். அம்மா, இங்கே இருக்கிறீர்களா-? திருமதி ஸ்மித், நான் தவறாக கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன். என்னை மன்னிக்கவும். ஆனால் நாம்--ஒருகால் இன்றிரவு ஆராதனைக்கு அவர்கள் வரக்கூடும். இங்கே வர ஒரு வேளை அவர் முயற்சித்திருக்கலாம், இங்கே வருவதற்கு ஏதோ ஒரு வழியில், மேலும் இங்கே இருக்கும் கார் அது போன்றே இருந்தது; பில்லியும் கூறினான், "பாட்டி இங்கே இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்". நான், "இது அந்த கார் போன்று தான் இருக்கிறது" என்றேன். 3. டில்லி எனும் பெயர் கொண்ட ஒரு மருத்துவர் சிக்காகோவில் நடந்த என்னுடைய கூட்டத்தில் சுகம் பெற்றார். அங்கே அவர்கள் ஒரு பெரிய தனி மருத்துவமனை வைத்திருக்கிறார்கள், குணப்படுத்த முடியாத வியாதியுடன் அவர் கூட்டத்திற்கு வந்து, அதிசயிக்கதக்க விதத்தில் குணமானார், மேலும் அவருடைய ஜீவியத்தை கர்த்தராகிய இயேசுவிற்கு சமர்ப்பித்தார். மேலும் நான் பல, பல மருத்துவர்களை தேசத்தின் பற் பல பாகங்களில் கண்டிருக்கிறேன். இங்கே சில நாட்களுக்கு முன்பு, டாக்டர். தியோடர் பால்வீ-டஸ், மேற்கு கடற்கரையில் இருப்பவர்களில் இங்கிருக்கும் யாருக்காவது தெய்வீக சுகமளித்தல் விஷயமாக வந்த டாக்டர். பால்வீ தெரியுமா, அந்த மனிதன் மாற்றப்பட்டார், நான் அவருக்கு ஒரு நீர்ப்பாசன வடிகாலில் ஞானஸ்நானம் கொடுத்தேன். ஜனங்கள் நியூயார்க்கிலிருந்து, அறுவை சிகிச்சைக்கென விமானத்தில் அவரிடம் வரும் போதுகூட, அவர் மருத்துவம் பார்ப்பதை மேலும் அவர் கலிபோர்னியாவிலுள்ள நிறுத்தி விட்டார். ஒக்லாண்ட் நகரத்திலுருக்கும் சேரிகளில் ஒரு சிறிய மிஷனரி குழு நடத்தி வருகிறார், டாக்டர்.தியோடர் பால்வீடஸ், ஒரு அற்புதமான கிரேக்க மனிதன். மேலும் அவருடைய மனைவி அர்மேனியாவை சார்ந்தவள். 4. மேலும் அந்த-அந்த திருமதி அர்மேனியாவை சேர்ந்த ஒரு பெண், இரண்டு மார்பகங்களும் புற்று நோயால் அகற்றப்பட்டு மரிக்கும் நிலையில் அங்கே இருந்த போது, கர்த்தர் கூறினார் "இன்னும் மூன்று நாட்களில் அவள் வீதியில் இருப்பாள்" என்று. அப்பொழுது அவர் என்னை பார்த்து சிரித்தார். அவர் கூறினார், "என்னே ஒரு வெட்கக்கேடு," "எத்தனாகிய நீ, அந்த பெண்ணை அது போன்ற போலியான சிந்தைகளின் கீழ் கொண்டு போகிறாய்" என்றார். நான் கூறினேன் "ஐயா, அது நானல்ல; அவர் தான் அதை கூறினார்" என்றேன். அவர் கூறினார், "நல்லது, அந்த பெண் இன்னும் ஆறு மணி நேரத்தில் இறந்து விடுவாள் என்று உனக்கு தெரியுமா." "கடந்த இருபத்து நான்கு மணி நேரமாக அவள் சுய நினைவின்றி இருக்கிறாள். அவள் எந்த மணி நேரத்திலும் போய்விட கூடும்" என்றார். நான் கூறினேன், "இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்தில் அவள் மட்டும் வீதிகளில் கூச்சலிட்டுக் கொண்டிருக்கவில்லையென்றால், நான் என்ன செய்வேனென்று உங்களிடம் சொல்லுகிறேன். என் முதுகில் 'கள்ள தீர்க்கதரிசி' என்று எழுதி மாட்டிக் கொள்கிறேன், அப்பொழுது நீங்கள் என்னை உங்களுடைய பெரிய காடிலியாக் காரில் ஏற்றிக் கொண்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் வீதிகளில் கூட்டி செல்லலாம். ஆனால் அவள் வீதியில் இருந்தால், நான் உங்கள் முதுகில் 'போலி மருத்துவர்' என்று எழுதி உங்களுக்கு முன்பாக ஓட்டிச் செல்வேன். இப்பொழுது, நாம் இருவரும் கை குலுக்கி விட்டு இங்கே நின்று; என்ன நடக்கிறதென்று பார்ப்போம் " என்றேன். ஆனால் அவர் அதை செய்யமாட்டார். அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில், அந்த பெண் அங்காடியில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தாள், அவள் இன்று வரையிலும் சுகத்தோடு ஒரு ஆரோக்கியமான பெண்ணாயிருக்கிறாள். அது நடந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. அது நம்முடைய கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை காட்டுகிறது, கடந்த இரவு தூக்கு படுக்கையில் மரிக்கும் நிலையில் கிடந்த அந்த பையனை அசைந்து எழும்பும்படிக்கு செய்யக் கூடிய ஒரு தேவன் என்னவெல்லாம் நடந்ததோ அதை பற்றி அந்த பையன் இன்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவர் இன்னுமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாயிருக்கிறார். அவர் அப்படியாகவே இருப்பதற்கு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். 5. இப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால், இன்றிரவு நாம் மறுபடியுமாக வியாதியஸ்தருக்காக ஜெபிக்க இருக்கிறோம். ஜனங்களே. இங்கே உங்களோடுகூட நாங்கள் ஒரு நல்ல இரவை கொண்டிருப்போம் என நம்புகிறோம். அநேகமாக நாம் மறுபடியுமாக ஒன்று சேர்ந்து சிறிது நீண்ட நேரம் தரித்திருக்கலாம். நாம் பாஸ்டர்களையும் மற்றவர்களையும் ஒருங்கிணைத்து சிறிது நீண்ட நேர கூட்டத்தை கொண்டிருக்கலாம். இப்பொழுது, ஸ்தாபன சபையின் கட்டுப்பாட்டில் இருக்கிற அல்லது கட்டுப்பாட்டில் இல்லாத ஆனால் ஒரு ஸ்தாபன சபைக்கு சொந்தமான இந்த கூடார மைதானத்தில் இன்று நான் வந்திருக்கிறேன். நிச்சயமாகவே இந்த சபைக்கு, மெதோடிஸ்டு சபைக்கு நாங்கள் எங்கள் முழு இருதயத்துடனும் வணக்கத்தை தெரிவிக்கிறோம். ஏனெனில் இந்த உலகத்தில் நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுவிற்காக இந்த மெதோடிஸ்டு சபை மகத்தான காரியங்களை செய்திருக்கிறது. மேலும் அந்த சபை சுவிசேஷத்தை பிரசங்கிப்பதின் மூலமாக, பல ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை கர்த்தராகிய இயேசு இடத்தில் வழி நடத்தி இருக்கின்றனர். இந்த ஜீவியம் முடிந்த பின்னர், நாம் அனைவரும் அக்கரையில் சந்திக்கும் போது அது எப்படியாயிருக்கும் என்று நான் வியக்கிறேன். 6. சென்ற இரவு இங்கே வந்திருந்த பொழுது, தெய்வீக சுகமளித்தல் என்ற பொருளின் பேரில் அணுகினேன், அதை நான் ஒரு உபதேச கண்ணோட்டத்தில் அணுகவில்லை, ஏனெனில் நான் கர்த்தராகிய இயேசுவின் ஜீவியத்தில் நடந்த நிகழ்ச்சிகளை பற்றி பேசலாம் என்று இங்கே இருந்த போது நான் நினைத்தேன். அதைத் தான் சென்ற இரவு நான் பேசினேன். ஏனெனில் நாம் ஒன்றாக இருக்கும் போது எவ்வளவு நன்றாக இருக்கிறோம் என்பதெல்லாம் பொருட்டே அல்ல, மேலும் எப்படி... வெவ்வேறு சபைகள் வெவ்வேறு உபதேசங்களை விசுவாசிக்கிறது, எனவே நாம்--நாம் சபையிலிருக்கும் போது, எல்லா விதமான உபதேச கோட்பாடுகளையும் விட்டு விட்டு, நாம் கிறிஸ்தவ பண்புடையவர்களாக இருக்க விரும்புகிறோம். அது இருக்கிறபடியே-நாம் கிறிஸ்துவை, அவர் சிலுவையில் அறையப்பட்டதை, நாம் அனைவரும் ஒருமனப்படுகிறதை பிரசங்கிக்கிறோம். எனவே இந்த சுவிசேஷ ஊழியத்தில், இந்த பிற்பகலில், சற்றே சிறிது நேரம் பேசுவதற்கு, கர்த்தருக்கு சித்தமானால், என்னுடைய இருதயத்தில் இன்னுமாக இயேசுவின் ஜீவியத்தில் நடந்த நிகழ்ச்சிகளை பற்றியே பேச வேண்டுமென தோன்றுகிறது. அந்த விதத்தில், அவர் செய்ததிலிருந்து அல்லது அவர் கூறியதிலிருந்து ஏதோவொன்றை நாங்கள் நாடக வடிவிலோ அல்லது மேற்கோளாகவோ காட்டுகிறோம். அப்படி செய்யும் போது உபதேச கருத்துக்கள் அதனுடன் இணைந்திருக்காது, சற்றே சுத்தமான எளிமையான சுவிசேஷம். நான் அதை நேசிக்கிறேன், நீங்களும் நேசிக்கவில்லையா-? அது சரி. 7. இப்பொழுது, நாம் புஸ்தகத்தை திறப்பதற்கு முன்னர், நாம் பக்கங்களை திறக்கலாம், அந்த விதமாக, ஆனால் ஒரே ஒருவரால் மட்டுமே அந்த வார்த்தையை சரியாக விளக்கி காண்பிக்க முடியும், அது தான் பரிசுத்த ஆவியானவர்; அவ்வளவு தான். அதை எழுதியவர் அவர் தான். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? அவர் செய்தார், அவர் எழுதினார் அந்த... பழைய மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்டு, வேதாகமத்தை எழுதியிருப்பார்களானால், மேலும் அதை எழுதினது யாரென்றால்---என்னை மன்னிக்கவும், எனக்கு தெரியும், ஆனால் இப்பொழுது, வேதாகமத்திற்கு எத்தனை எழுத்தாளர்கள் என்று எனக்கு தெரியாது. என்னை மன்னிக்கவும், என்னால் அதை இப்பொழுது மேற்கோள் காட்ட முடியாது, ஏனெனில் என்னுடைய மனதில் இரண்டு வெவ்வேறு எண்கள் இருக்கின்றன. அதை நான் குழப்பிவிடுவேனோ என்று அச்சம் கொள்கிறேன். ஆனால் எப்படியாயினும், அது எழுதப்பட்டு விட்டது... ஏறக்குறைய 200-ஆண்டுகளில் ஒரு சுவி- ஒரு பகுதி இன்னொருவராலும். ஆயிரக்கணக்கான மைல்கள் இடை வேளையில் வெவ்வேறு காலகட்டங்களில் என்ற போதும் அதில் ஒரு சிறு பகுதிகூட மற்ற பகுதிக்கு முரணாக அமையவில்லை. ஏன் நம்மில் இருவர் சேர்ந்து ஒரு நபருக்கு எந்தவொரு முரண்பாடும் இல்லாமல் ஒரு கடிதம் எழுத முடியாது. அது சரியல்லவா-? ஆனால் வேதாகமம் எவ்வளவு ஆவியின் ஏவுதலாயிருக்கிறது. எல்லா வேதவாக்கியங்களும் ஆவியின் ஏவுதலினால், பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் அளிக்கப்பட்டவை, அவரே வார்த்தைகளை எழுதினார். அது அழகாயிருக்கிறது. நாம் கர்த்தராகிய இயேசுவை அவரின் தயவிற்காக நேசிக்கிறோம். 8. இப்பொழுது, அவர் ஒருவரால் மட்டுமே வேதவாக்கியத்தை சரியாக வியாக்கியானம் செய்ய முடியும். ஆனால் நாம் அபிஷேகிக்கப்படும் வரை நம்மில் ஒவ்வொருவரும் அதை செய்ய முயற்சிக்கிறோம், அப்படி செய்யும் போது நம்மை நாமே அதற்குள் நுழைத்துக் கொள்கிறோம். சுயமானது அதில் இருக்கும்வரை, பரிசுத்த ஆவியானவரால் அதில் இருக்க முடியாது, சுயமானது இருக்கும் வரை. இப்பொழுது, யாரேனும் கதவண்டைக்கு செல்லக் கூடுமானால், அங்கிருக்கும் வாயில் காப்போன் யாரேனும் அல்லது வேறு யாராவது, சில நபர்கள், பெண்கள் தங்கள் குடைகளுடன் மழையில் நிற்கின்றனர். நம்மால் முடிந்தவரை அவர்கள் அவர்களை சௌகரியமாக்கட்டும். இது போன்று மழை பெய்யும் நாளிலும்கூட கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய தெளிவான எளிமையான சுவிசேஷத்தை கேட்க வரும் ஜனங்களின் விசுவாசத்தையும் உத்தமத்தையும் நாங்கள் மெச்சுகிறோம். என்னை தவறாக நினைக்கவில்லையென்றால், இங்கே முன் வரிசையில் அமர்ந்திருக்கும் இந்த சிறிய சீமாட்டி, சரியாக இங்கே திருமதி வுட் அவர்களின் பக்கத்தில், நான் இங்கே வருவதற்கு காரணமாயிருந்தவர்களில் நீங்களும் ஒருவர் தானே-? சகோதரியே, உங்களுடைய பெயர் எனக்கு தெரியாது; நான்-நான் உங்களுக்காக ஜெபித்தேன். என்னை தவறாக நினைக்கவில்லையென்றால், லூயிவில்லில் இருக்கும் திறந்த வாசல் சபையில் இருந்தீர்கள் தானே-? நீங்கள் சுகமானீர்கள் அல்லது ஏதோவொன்று, ஏதோ வியாதியிலிருந்து மேலும்-மேலும் அப்பொழுதிலிருந்து உங்களுடைய இருதயம் எழுச்சியடைந்துள்ளது. நீங்கள் அதில் - இந்த பட்டணத்தில் இருக்கும் ஒரு மெதோடிஸ்ட் சபையில் ஒரு உறுப்பினர் என்று நான் நம்புகிறேன். 9. நான் இங்கே வரவேண்டுமென்று உங்களுடைய இருதயத்தில் இருந்தது. எனக்கு தெரியவில்லை --என்னை மன்னிக்கவும் உங்களுடைய பெயர் எனக்கு தெரியவில்லை. ஆனால் வுட்ஸுடன் கூட வந்திருக்கும் இந்த பெண், வுட்ஸ் (என்னுடைய அன்பார்ந்த நண்பர்கள், அண்டை வீட்டுக்காரர்கள்) என்னுடைய பக்கத்து வீட்டில் வாழ்ந்தவர். இராஜரீகமாக, அவர்கள் கிறிஸ்தவர்கள். ஒரு நபரின் பக்கத்து வீட்டில் நீங்கள் வாழ்ந்தால், அவர் எப்படிபட்டவர் என்பதனை உங்களால் மிக நன்றாக கூறிவிட முடியும், உங்களால் கூறமுடியாதா-? அது சரி. ஆகவே, இங்கிருக்கும் மலைத்தொடர்ச்சி மேடுகளில் இருந்து வந்திருக்கும் உங்களுடைய பிள்ளை--இரண்டு பிள்ளைகள் இங்கு எங்கோ இருக்கிறார்கள், திரு மற்றும் திருமதி பாங்ஸ் வுட் சுவிசேஷ ஊழியத்தில் அவர்களுடைய ஐக்கியம் எனக்கு கிடைத்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் நம்முடைய அன்பார்ந்த சகோதரி இங்கே இருக்கிறார்கள், கூடுதலாக, அவர்களை பற்றி எனக்கு சிறிதளவே தெரியும். ஆனாலும் அவர்கள் ஒரு விசுவாசமுள்ள கிறிஸ்தவள் என்பதை அறிவேன். அந்த சகோதரி எந்த சபையை சார்ந்தவளோ அங்கே அவள் ஒரு சிறந்த பணி செய்பவள் என்பதையும் நான் அறிவேன். எனவே தேவன் அவர்களையும் அவர்கள் சபையையும் ஒருமிக்க ஆசீர்வதிப்பாராக 10. இப்பொழுது, அந்த -- நான் கூறிக் கொண்டிருந்தவாறு, பரிசுத்த ஆவியானவரே வேதாகமத்தை எழுதினார், அது எந்த விதத்தில் எழுதப்பட்டிருக்கிறதென்றால், மனிதனால் தன்னுடைய தன்னுடைய மனதின் எண்ணத்தினால் அது என்னவென்றே புரிந்து கொள்ள முடியாதவாறு எழுதப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் எவ்வளவு நன்றாக எழுதி வைத்து இருந்தாலும், அதை நீங்கள் எவ்வளவு நன்றாக கோர்வையாக்க முடிந்தாலும், அது ஒரு பொருட்டே அல்ல, தொடங்கும் முன்பே அது தவறாயிருக்கிறது. பாருங்கள்-? ஏனெனில் அதை அவர் ஞானிகள் மற்றும் கல்விமான்களின் கண்களிலிருந்து மறைத்தார். அது ஆவிக்குரிய வெளிப்பாடாயிருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நாட்களிலிருந்த பரிசேயர்களையும் சதுசேயர்களையும் பாருங்கள், கிறிஸ்து எப்படி வருவாரென்றும், மற்ற காரியங்களை குறித்தும் அவர்கள் அதைப் பற்றின எல்லாவற்றையும் புள்ளியளவில் கணக்குப் போட்டு வைத்திருந்தனர்; ஆனால் அவர் வந்த போதோ, அவர் தேவன் என்பதை காண்பிப்பதற்காக அவர்கள் போட்டு வைத்திருந்த கணக்குகளுக்கெல்லாம் நேர்மாறாக வந்தார். அது இருந்தது அவர் வேதாகமத்திற்கு முரணாக வரவில்லை. அவர் வந்தார் அவர்களுடைய வேத கருத்துகளுக்கு முரணாக வந்தார். ஆனாலும் வேதாகமம் கூறிய விதமாகவே இம்மியும் பிசகாதவாறு அவர் வந்தார். கன கட்சிதமாக 11. இப்பொழுது, என்னிடம் சிறிது தெளிவற்ற உச்சரிப்புகள் உள்ளது. திரு மற்றும் திருமதி செப் ஸ்மித் அவர்களே நான்-நான் முன்பு அங்கே உங்களுடைய இடத்தில் சிறிய பையனாக இருத்தது போன்று இல்லை. நான் -- ஒரு வயோதிபனாகிவிட்டேன். மற்றுமொரு நாளில் எனக்கு முதல் பல் வலி ஏற்பட்டது, எனவே ஒரு பல்லை பிடுங்கவேண்டியிருந்தது. அது இருந்த இடத்தில் அவர்கள் வேறொன்றை வைத்தனர், அதனால் என்னுடைய வாயில் இந்த இடத்தில் ஒரு கம்பி இருக்கிறது, அது நிச்சயமாகவே ஒரு தடையாக இருக்கிறது. என்னுடைய வாயில் ஏதோ மிக அதிகமாக இருப்பதை போன்று நான் உணருகிறேன். எனவே இதனுடன் நான் பழகும்வரை, என்னுடைய அதுபோன்ற சரியில்லாத உச்சரிப்புகளை மன்னிக்கவும். ஆனால் நமக்கு வயதாகும் போது, நாம் அந்த காரியங்களை கற்றுக் கொள்வது அவசியமாயிருக்கிறது. மற்றுமொரு நாளில் நான் பேசிக் கொண்டிருந்தேன், கொஞ்சமாக நான்... என் மனைவியிடம் கூறிக்கொண்டிருந்தேன்; என்னிடம் மீந்திருந்த கொஞ்சம் தலைமுடியை நான் சீவிக் கொண்டிருந்த போது, என் மனைவி என்னிடம் கூறினால்; "பில்லி, உங்களுக்கு வழுக்கை - தலையாகிறது" என்றாள். நான் கூறினேன்,"நல்லது, தேனே,"ஆனால், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அதில் ஒன்று கூட அழிந்து போகவில்லை" என்றேன். அவள் கூறினாள், "நல்லது, அவை எங்கே இருக்கிறது-?" நான் கூறினேன், "நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன், அப்பொழுது நீ--நான் பதில்--நீ எனக்கு பதில் சொல், பின்பு நான் உனக்கு பதிலளிப்பேன் என்றேன். நான் அவைகளை பெறுவதற் கு முன்பு அவை எங்கே இருந்தது-? முன்பு அவை எப்பொழுதும் எங்கே இருந்ததோ, அவை அங்கே சென்று எனக்காக நான் அவைகளிடம் செல்லும்படி காத்திருக்கிறது. " ஆமென். ஓ. என்னே, 12. எனவே எனக்கு எவ்வளவு வயதாகிறதென்றும், உங்களுக்கு எவ்வளவு வயதாகிறதென்றும், நமக்கு எவ்வளவு சுருக்கங்கள் இருக்கிறதென்றும், நமக்கு எவ்வளவு கூன் விழுமென்றும் என்னத்திற்காக நான் கவலைப்பட வேண்டும்-? அது ஒரு பொருட்டே அல்ல. இந்த நாட்களிலொன்றில் இயேசு வருகிறார், நாம் நொடி பொழுதில் மறுபடியுமாக வாலிப மனிதனாகவும் வாலிப பெண்ணாகவும் மாறி என்றென்றும் ஜீவிப்போம். என்னே ஒரு... ஒவ்வொரு நுண் துகள்களும், ஒவ்வொரு சிறிய... நம்முடைய சரீரங்கள் எதிலிருந்து செய்யப்பட்டு இருக்கிறதென்றால், ஓ காஸ்மிக் கதிர்களாலும், பெட்ரோலியத்தாலும் மேலும் அது போன்றவைகளாலுமே. ஆனால் அவை எங்கிருந்தோ வருகிறது. அவை இங்கே இருக்கவில்லை; பின்பு அவை இருக்கிறது; பின்பு அவை மறுபடியுமாக இல்லாமற்போய்விடுகிறது. ஆனால் உங்களுடைய சரீரத்தை ஒன்றாக பிடித்திருக்கும் ஒவ்வொரு அணுவையும் தேவன் அறிவார். ஒளியின் ஒவ்வொரு சிறு துணுக்கையும், ஒவ்வொரு நுண் துகளையும், ஒவ்வொரு செல்லையும், பெட்ரோலியத்தின் ஒவ்வொரு சிறு பகுதியையும் மேலும் எல்லா கால்ஷியத்தையும், பாஸ்பேட்டையும், பூமியிலிருந்து வந்து மனித சரீரத்திற்குள் செல்லும் எல்லாவற்றையும், எல்லா சிறு துணுக்குகளும் சரியாக எங்கே அமைந்திருக்கிறது என்பதையும் அவர் அறிவார். மற்றும் ஏதோவொரு நாளில், உங்களுடைய ஆவி வெளியே விடப்பட்டு, அது தன்னுடைய ஜீவனுக்காக கதறும். மேலும் ஒரு வயதான மனிதனாகவோ அல்லது பெண்ணாகவோ அல்ல... 13. ஆனால் கவனியுங்கள், மற்றுமொரு நாளில் லூயிவில், கென்டக்கியிலுள்ள ஒரு மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், ஒரு ஆப்பிரிக்க பொருளின் பேரில் பேசிக் கொண்டு இருந்தோம், மேலும் அவர் கூறினான், "நல்லது." நான் கூறினேன், "நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன் மருத்துவரே இப்பொழுது ஒவ்வொரு முறையும் நான் சாப்பிடும்போது என்னுடைய ஜீவனை நான் புதுப்பிக்கிறேன். என்பது உண்மையா-? "நிச்சயமாக" அவர் கூறினார், "நீங்கள் உணவை சாப்பிடும் போது அது இரத்த அணுக்களை உண்டாக்குகிறது. ஆகவே இரத்த அணுக்கள் உங்கள் ஜீவனை புதுப்பிக்கிறது " என்றார். நான் கூறினேன், "ஏன் அது, நான் பதினாறு வயதுடையவனாய் இருந்த போது சாப்பிட்ட அதே விதமான பீன்ஸ்களையும் உருளைக் கிழங்குகளையும், சோள ரொட்டிகளையும் மற்றும் அது போன்றவைகளையும் நான் சாப்பிடுகிறேன். அதை நான் பதினாறு வயதில் சாப்பிட்டபோது, நான் பெரியதாகவும். பெலமாகவும் ஆரோக்கியமாகவும் ஆனேன், எல்லா நேரத்திலும் சக்தி வாய்ந்தவனாய் இருந்தேன்; மேலும் இப்பொழுதும் நான் அதையே தான் சாப்பிடுகிறேன். அதில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே, ஆனால் நான் நினைக்கிறேன், எனக்கு வயதாகி எல்லா நேரங்களிலும் பெலவீனமாகவே இருக்கிறேன் என்று-? எனக்கு அதை சொல்லுங்கள், நான் புதிய ஜீவனை உள்ளே போடுவேனென்றல், 30 வருடங்களுக்கு முன்னால் அது எனக்கு என்ன செய்ததோ அதை ஏன் இப்பொழுது அது எனக்கு செய்ய மறுக்கிறது-? " பாருங்கள்-? அவர் கூறினார், "நல்லது..." நான் கூறினேன், "நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன், நீங்கள் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றுவீர்களானால், அது அதை நிரப்புகிறது என்றால், அது அதை நிரப்புவதை ஏன் நிறுத்திவிடுகிறது-? என்றேன்.. அவர் கூறினார், "நல்லது..." நான் கூறினேன், "ஏனெனில், தேவன் கூறியுள்ளார்." அது சரி. பாருங்கள்-? தேவன் கூறி உள்ளார். 14. எனவே நாம் வளரும் போது... நாம் ஒரு மலரை போன்று, ஒரு ஓவியத்தை போன்று ஒரு குறிப்பிட்ட வயதை வந்தடைந்தோம். சுமார் 22 அல்லது 3 வயது. உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் திருமணமான போது, இங்கிருக்கும் அன்பார்ந்த வயதான சகோதரனே, உங்களுடைய சோள வயலிலும் மற்றவற்றிலும் நீங்கள் வேலை செய்த போது வெட்கத்தினால் கன்னங்கள் சிவந்த அந்த சிறிய இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள்... அது போன்ற பலரை இன்று நாம் பெற்றிராதது மிகவும் மோசமானது. என்னவென்று உங்களுக்கு தெரியுமா, 30 வருடங்களாக வெட்கப்படும் பெண்ணை நான் பார்த்ததே இல்லை. எல்லா தன்னடக்கங்களும் சென்று விட்டது. இப்பொழுது அதை பற்றி நான் ஆரம்பிக்க விரும்பவில்லை. எல்லாம் சரி, நான் சத்தியத்தை விசுவாசிக்கும் பழைய பாணியிலான, காட்டுப் பகுதியை சேர்ந்த, கரடு முரடான நேரடியாய் பேசும் பிரசங்கியார் (sassafras preacher). இந்த தற்போதுள்ள ஜீவியத்தில், கர்த்தராகிய இயேசுவின் வருகையை எதிர்நோக்கி, ஜனங்கள் தெய்வ பக்தியுடனும் பரிசுத்தத்துடனும் ஜீவிக்க வேண்டுமென்று நான்--நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நாம் ஓரிடத்திற்கு செல்வோமென்றால், சுமார் 23 வயதில், நமக்கு திருமணம் முடிந்து, நம்முடைய இருதயத்துக்கேற்றவளை கரங்களில் ஏந்தி கொண்டு வீட்டிற்கு சென்றோம். சகோதரர்களே அது உங்களுக்கு நினைவிருக்கிறதா. அப்பொழுது நீங்கள் உங்களுடைய மிகச் சிறந்த வயதிலிருந்தீர்கள். உங்களுக்கு தெரிந்த முதல் காரியம், ஒரு நாள் காலையில் மனைவி எழுந்து, கூறினால், "அன்பே, ஒரு வெள்ளை முடியை நான் காண்கிறேன்" என்று. நீங்கள் கூறினீர்கள், "அன்பானவளே, அந்த இரண்டு அழகிய கண்களின் கீழே சுருக்கங்கள் இருப்பதை நான் கவனித்து வருகிறேன்" என்று. பாருங்கள், என்ன காரியம்-? மரணம் விதிக்கப்பட்டிருக்கிறது; அது உங்களை இக்கட்டான நிலைக்கு கொண்டு வருவதற்கு இன்னும் நீண்ட நாட்கள் இல்லை. அங்கிருந்து அது வெளியே சென்று விடும்... சிறிது நாட்கள் கழித்து உங்களுக்கு வயதாகியிருக்கும் போது; அது உங்களை எடுத்துக் கொள்ளும், ஆனாலும் அதனால் செய்ய முடிந்தது அவ்வளவு தான். அவ்வளவே தான். 15. நீங்கள் உங்களுடைய மிகச் சிறந்த வயதிலிருந்த போது, எல்லாவிடங்களிலும் இருந்த ஒவ்வொரு நுண் துகள்களும், சரியாக உச்சகட்ட நிலையில் இருந்தது, தேவன் கூறுகிறார், "இப்பொழுது இந்த ஓவியம் வரைந்தாயிற்று. வரவிருக்கின்ற என்னுடைய மகத்தான ஆயிர வருட அரசாட்சியில் அது தான் எனக்கு வேண்டும். எனவே நான் சற்று... இப்பொழுது, மரணமே நீ அங்கே இருகிறாய், ஆனால் உன்னால் அவர்களை இப்பொழுதே எடுத்துக் கொள்ள முடியாது. நீ அவர்களில் கிரியை செய்ய ஆரம்பிக்கலாம், ஆனாலும் நான் உனக்கு கட்டளை இடும் வரை உன்னால் அவர்களை எடுத்துக்கொள்ள முடியாது" பாருங்கள்-? பின்பு அந்த மகத்தான உயிர்தெழுதலின் போது, அப்பொழுது நாம் வெளியே வருவோம். மரணம் நமக்கு செய்த எல்லா காரியங்களும், மரணத்தின் போதே முடிவடைந்து விடுகிறது. எனவே பின்பு நாம் ஒரு புதிய ஜீவனுக்குள் எழுந்திருப்போம். அது அற்புதமாக இருக்கும் அல்லவா-? எல்லா வெள்ளை முடிகளும் சென்றிருக்கும், முதுமை அகன்றிருக்கும். மேலும் நாம் என்றென்றும் இளமையாகவே இருந்து என்றென்றுமாய் கர்த்தருடைய அழகில் ஜீவிப்போம். ஒரு போதும் வியாதிபட வேண்டியிருக்காது. ஒரு போதும் வயதாக வேண்டியிருக்காது, ஒரு போதும் மருந்து சாப்பிட வேண்டியிருக்காது, ஒரு போதும் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்காது, ஒரு போதும் ஆம்புலன்ஸ் அலறுவதுமில்லை. அது அற்புதமாக இருக்கும் அல்லவா-? ஏன், நம்மை பைத்தியமென்று அவர்கள் அழைக்கின்றனர், இந்த உலகத்தின் மிகவும் புத்திசாலியான ஜனங்கள் நாம் தான் என்று நான் நம்புகிறேன். நாம் தான், நான் அதை கூறுகிறேன், எல்லாம் சரி. ஏனெனில் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறோம். இந்த வேதாகமம் உள்ளடக்கியுள்ள அனைத்தும், அதிலிருக்கும் வாக்குத் தத்தங்களும் அருமையாய் இருக்கிறது. எனவே நம்முடைய கர்த்தர் எவ்வளவு நல்லவராக இருந்திருக்கிறார். அவரின் அருமையான ஜீவனோடு இப்பொழுது நாம் பேசலாம். இந்த பிற்பகலில் அவர் நமக்காக வார்த்தையை திறப்பாரானால், வேதாகமத்தில் இருக்கக்கூடிய ஒரு சிறு நிகழ்வைப் பற்றி, அதன் பின் நாம் சீக்கிரமாக வெளியே சென்று, மறுபடியும் இன்றிரவு நாம் கூடலாம். வியாதியஸ்தர்களுக்காக நாம் ஜெபிக்க போகிறோமென்றால் பையன்கள் இன்னும் கொஞ்சம் அதிகமான ஜெப அட்டைகளை அளிப்பார்கள் என நான் நம்புகிறேன், சுமார் ஒரு, ஓ, ஆறரை மணியளவில், அது போன்ற நேரத்தில். 16. நாம் ஜெபிக்கலாமா-? எங்கள் பரலோக பிதாவே, இன்று இந்த ஜனங்களின் மத்தியில், இங்கே கென்டக்கி மாகாணத்தில் நாங்கள் இருப்பதற்கு மகிழ்கிறோம். இந்த மலைத் தொடர்ச்சி மேடுகளில், இங்கிருக்கும் பழைய கல்லறை தோட்டங்களில், குறியிடும் எழுது கோளாலும் (marker) கூட பல கல்லறைகளுக்கு அடையாள குறி போடப்படவில்லை என்பதை நான் அறிவேன் ஒரு ஒட்டுப் போட்ட சட்டை மற்றும் இரண்டு ஓவரால்ஸ் (overalls -சட்டை மற்றும் பேன்ட் ஒன்றாக தைக்கப்பட்டிருக்கும் உடை) வைத்திருந்த ஏழை தகப்பன், அவனால் ஒரு கல்லறையை கூட கட்ட முடியவில்லை. ஆனாலும் அவன் தன்னுடைய அன்பானவளை, அந்த குழந்தையை அவளின் பக்கத்தில் புதைத்த போது, அவன் ஒரு சிறிய அடையாளக் கொம்பை அல்லது ஒரு சிலுவையை நட்டு வைத்தான். ஆனால் பரலோகத்திலிருக்கிற தேவன், அந்த மகத்தான புஸ்தகங்களில், அங்கிருக்கும் கணக்கு புஸ்தகங்களில், அங்கே பெயர் எழுதப்பட்டிருக்கிறது. அவள் எங்கே இருக்கிறாள் என்பது உமக்கு தெரியும், அவளின் சரீரம் எங்கே கிடத்தப்பட்டு இருக்கிறதென்று கர்த்தாவே, நீர் மறக்க மாட்டீர் என்பதை அறிந்திருப்பதால் நான் மிகவும் மகிழ்கிறேன். இன்று. இங்கே உம்மை விசுவாசிக்கும் அவர்களுடைய பிள்ளைகளுடன் நாங்கள் தொடர்பு கொள்வதால் மகிழ்கிறோம். இப்பொழுதும் பிதாவே, நீர் எங்களுடைய பிரசன்னத்திற்குள்ளாக வரவேண்டுமென்று அல்லது மாறாக நாங்கள் உம்முடைய பிரசன்னத்திற்குள்ளாக வர வேண்டுமென்று, நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன். உம்முடைய மகத்தான சமுகம் இருக்கட்டும், கர்த்தாவே, உம்முடைய நன்மைகளாலும் ஆசிர்வாதங்களாலும் எங்களுடைய ஆவிகளை பொங்கி வழியும்படி செய்யும், நாங்கள் தகுதியானவர்கள் என்பதால் அல்ல, நாங்கள் தகுதியற்றவர்கள், ஆனால் அதை நீர் எங்களுக்கு வாக்களித்துள்ளதால், கர்த்தாவே, நாங்கள் அதை எதிர்நோக்கி இருக்கிறோம். இப்பொழுது, வேத வாக்கியங்கள் முழுவதுமாக ஒன்றாக கட்டப்பட்டிருக்கிறது. நமக்காக வேதாகமத்தை வியாக்கியானிக்கும்படி பரிசுத்தாவியை மட்டும் நாம் பெற்று இருப்போமானால், வேதாகமம் பேசுவதை காட்டிலும் அது மிகவும் எவ்வளவோ ஆழமாய் இருக்கிறது. நாம் வேதாகமத்தை கீழ்நோக்கி பார்க்கும் போது மட்டுமே படிக்கிறோம், ஆனால் ஓ பரிசுத்த ஆவியானவர் எப்படி கூறுகிறார் என்றால், "என்னுடைய பிள்ளையே, இப்பொழுது நீ இந்த வேதாகமத்தை பார்க்கும் போது நீ என் முகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறாய். இதைத் தான் நீ அறிந்துகொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்". மேலும் பரிசுத்த ஆவியானவர் இன்றைக்கு தேவனுடைய வார்த்தையை எடுத்து, நம்முடைய தேவைக்குத்தக்கதாக எல்லா இருதயங்களுக்கும் அதை அளிப்பாராக நாம் இப்பொழுது வார்த்தையை சுற்றி ஐக்கியம் கொள்வோமாக. எங்களை ஆவியில் எழும்பப் பண்ணும் நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம் ஆமென் 17. வேதாகமத்தில் இருக்கும் ஒரு சிறு பகுதி, இங்கே பரிசுத்த லூக்காவின் புஸ்தகத்தில் காணப்படுகிறது. என் முழு ஜீவியத்திலும் நான் செய்த பிரசங்கங்கள் அனைத்திலும். இந்த வேத வாக்கியத்தை என்னுடைய ஜீவியத்தில் இதற்கு முன் நான் ஒரு போதும் அணுகியதே இல்லை. இது ஒரு போதும் நான் முயற்சி செய்யாத ஒரு புதிய வசனமாயிருக்கிறது. ஆனால் சிறிது நேரத்திற்கு முன்பு என்னுடைய விடுதியில் நான் அமர்ந்திருந்த போது, ஏதோவொன்று இந்த இடத்திற்கு என்னை இழுத்து வந்தது. அதை நாம் பரிசுத்த லூக்காவின் சுவிசேஷத்திலே படிக்கலாமா. நாம் 7-ஆம் அதிகாரம் 36-ஆம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம்: பரிசேயரில் ஒருவன்.. தன்னுடனே - போஜனம் பண்ண வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டான். இயேசு விரும்பினார்- அல்லது பரிசேயன் விரும்பினான் தன்னுடைய இடத்திற்கு இயேசு வந்து போஜனம் பண்ண வேண்டுமென்று. இப்பொழுது, அதை -- அதை பற்றின நிகழ்ச்சியானது. நீங்கள் அந்த மொத்த அதிகாரத்தையும் முழுவதும் படித்த பிறகு, நீங்கள் அதனுடன் மிக நன்றாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பீர்கள் -- வேதாகமத்தின் பாணியுடனும் மற்றும் அது எவ்வாறு பேசுகிறது என்றும். ஆனால் இப்பொழுது, நம்முடைய நினைவுகளை இதற்கு திருப்பும் போது, இங்கே ஏதோ ஓன்று தவறாயிருக்கிறது. இங்கே இருக்கிறது.. நான் பேச விரும்புவதை பற்றின எண்ணத்தை கொடுக்க அந்த முற்றுப்புள்ளி வரை இருக்கும் வேத வாக்கியம் போதுமானதாய் இருக்கும். மேலும் என்னுடைய தலைப்பு "பெருமை", ஓ. பெருமை மிகவும் சபிக்கப்பட்ட ஒன்று, மிக மிக மோசமானது, மிகவும் பொல்லாங்கானது தான் பெருமை. ஆனால் நம்முடைய சிறிய காட்சிக்குள் நாம் நுழையும் போது அங்கு ஏதோ ஓன்று தவறாய் இருப்பது போன்று தென்படுகிறது. அதனை நாம் இப்பொழுது, உபதேச கண்ணோட்டத்தில் இல்லாமல், ஆனால் இயேசுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியாக காண விரும்புகிறோம். உபதேச கோட்பாடுகளுக்காக அல்ல. ஆனால் அங்கே நிச்சயமாக, இங்கே ஏதோவொன்று தவறாயிருக்கிறது, ஒரு பரிசேயன் இயேசுவை காண வேண்டுமென, ஐக்கியத்திற்காக அவருடன் போஜனம் பண்ண வேண்டுமென விரும்புகிறான். அது முற்றிலுமாக முரணாய் இருக்கிறது. பரிசேயர்கள் இயேசுவை வெறுத்தனர். அவரால் அவர்களுக்கு எந்த பயனுமில்லை. அவர்களுக்கு அவர் ஒரு-ஒரு பெயல் செபூலாயிருந்தார், ஒரு பிசாசாக, ஒரு வஞ்சகனாக, மேலும் எந்த ஒரு பரிசேயனுக்கும் இயேசுவிடம் செய்வதற்கென்று எதுவுமே இல்லை. 18. ஆனால் இந்த சீமோன், அவன் இயேசு தன்னிடம் வர வேண்டுமென விரும்பினான், மேலும் கொஞ்சம்-அவரால் மகிழ்விக்கப்பட வேண்டுமென விரும்பினான். இப்பொழுது, அங்கே- அங்கே ஏதோ ஓன்று அந்த காட்சியில் தவறாய் உள்ளது. சிறு பெண்பிள்ளை எல்லா நேரங்களிலும் ஒரு -ஒரு பாட்டியை சுற்றி வருவதை, சிறிய ஆறு அல்லது ஏழு வயதுடைய பெண் பிள்ளை பாட்டியை சுற்றி வருவதை நாம் காணும் போது, அங்கு ஏதோ ஓன்று நடந்துகொண்டு இருக்கிறது. உள்நோக்கம் - மாற்றப்பட்டிருக்கிறது. இப்பொழுது, 6 வயது அல்லத 7 அல்லது 8 வயதை உடைய பெண்பிள்ளை வழக்கமாக அது போன்று செய்வது கிடையாது, அவள் சிறு பிள்ளைத்தனமாக இருப்பதையும், அவளின் வயதையுடைய பிள்ளைகளுடன் விளையாடுவதையுமே விரும்புவாள். ஆனால் ஒரு வேளை அவள் எல்லா நேரங்களிலும் பாட்டியையே பின்தொடர்வாள் என்றால், இப்பொழுது, அந்த பாட்டி அவளிடம் உண்மையாகவே நல்லவளாக இருக்க வேண்டும், அல்லது பாட்டி அவளை செல்லமாக கவனித்துக் கொள்ள வேண்டும், அல்லது அவள் பாட்டியின் செல்லமாக இருக்க வேண்டும், மாறாக, அல்லது-அல்லது-அல்லது ஒருவேளை உங்களுக்கு தெரியாமலிருக்கலாம், பாட்டி ஒரு பை நிறைய மிட்டாய்களை எங்கேயோ வைத்திருக்கலாம். பாருங்கள்-? அதை பற்றின பொருளானது, பாட்டியை பின் தொடரும் அந்த பெண் பிள்ளைக்குள் இருக்கும் உள் நோக்கமாயிருக்கிறது. ஆகவே நிச்சயமாக, இயேசுவை வெறுக்கும் இந்த பரிசேயன், அதற்கு பின்னாக ஏதோ ஒருவிதமான சரியில்லாத உள்நோக்கத்தை கொண்டிருந்தான். 19. வாலிப ஜனங்கள் வாலிப ஜனங்களுடனே செல்ல விரும்புவர். சிறு பிள்ளைகள் வீதிகளில் விளையாட விரும்புவர் என்பதை பற்றி வேதாகமம் ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகத்தில் பேசுகிறது தெருக்களில் விளையாடும் சிறு பிள்ளைகள் பொதுவான பொருட்களை கொண்டு இருப்பர் அவர்களின் பொம்மைகள், அவர்களுடைய பம்பரங்கள், அவர்களுடைய பொழுது போக்கு குதிரைகள் மற்றும் பல. சிறு பிள்ளைகள் சிறு பிள்ளைகளுடனே சேர்ந்திருப்பார்கள். இளம் பெண்கள் இளம் பெண்களுடனே சேர்ந்திருப்பார்கள். நடுத்தர வயதையுடைய பெண்கள் நடுத்தர வயதையுடையவர்களுடனும், வயதானவர்கள் வயதானவர்களோடுமே இருப்பர். சங்கங்கள், கிவானிஸ் மற்றும் ரோட்டரி அவர்களிடமும் பொதுவான காரியங்கள் இருக்கிறது. அவர்களுடைய சங்கங்களில் அவர்கள் ஒன்றாக சந்திக்க வேண்டியிருக்கிறது, எதற்காக என்றால் -சூழ்நிலைகள் எப்படி இருக்கிறதென்பதை பற்றியும் - சமூகத்தை பற்றியும், அல்லது ஏழைகளை எப்படி இந்த சூழ்நிலைகளிலிருந்து பார்த்துக் கொள்வது என்பவைகளை பற்றியும் பேசுவதெற்கென சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த பழைய கென்டக்கி பழமொழியை போன்று, அதனை என்னுடைய தாயார் பலமுறை சொல்ல நான் கேட்டிருக்கிறேன், "ஒரே சிறகுள்ள பறவைகள் ஒன்றாகவே பறக்கும்." அது மிகவும் உண்மையாக இருக்கிறது. 20. காகங்களும் புறாக்களும் ஒன்றோடொன்று அதிக ஐக்கியம் கொள்வதை நீங்கள் ஒரு போதும் காணவே முடியாது. அவை இரண்டும் வெவ்வேறு வகையான பறவைகள்; ஒன்றிடம் ஏதோ ஓன்று இருக்கிறது, மற்றொன்றிடம் வேறு ஏதோவொன்று இருக்கிறது. இப்பொழுது, காகமானது, அழுகிய பொருளை தின்று வாழும் பறவையாயிருக்கிறது. அது வெறுமனே செத்தவைகளை சாப்பிடுகிறது. ஆனால் புறாவினால் செத்தவைகளை சாப்பிடவே முடியாது. ஒரு வேளை புறா செத்ததை சாப்பிடுமானால், அப்பொழுது உடனே அந்த புறா மரித்து விடும்; அதனால் அதை ஜீரணிக்க முடியாது. புறா-புறா என்று அழைக்கப்படும் நமக்கு தெரிந்த பறவையானது - வேதாகமத்தில் இருக்கும் பரிசுத்தாவிக்கு புறாவானது அடையாளபடுத்தப் பட்டு இருக்கிறது. அந்த புறாவிற்கு எந்த பிச்சும் கிடையாது. அதினால் தீய கேடான காரியங்களை ஜீரணிக்க முடியாது; ஏனெனில் ஒரு வேளை அது அப்படி செய்யுமானால், அது புறாவின் மரணத்தை குறிக்கிறது. ஒரு மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் உலகத்தின் காரியங்களை ஜீரணிக்கவே முடியாது என்பதற்கு அது ஒரு மிகவும் அழகிய மாதிரியாயிருக்கிறது. ஏனெனில் அவர்கள் அதை செய்யும் போது, அது அவர்களை உடனே ஆவிக்குரிய மரணமடைய செய்கிறது. ஆனால் நீங்கள் அந்த பழைய காகத்தை எப்பொழுதாவது கவனித்ததுண்டா-? இப்பொழுது, அதினால் அழுகிக் கொண்டிருக்கும் பிணத்தின் மீது அமர முடியும், எளிய கென்டக்கி பாஷையில் சொன்னால், அழுகியதின் மீது. அது அங்கே அமர்ந்து நாள் முழுவதும் சாப்பிட முடியும். ஆனால் புறவினால் அதின் அருகில் கூட செல்ல முடியாது; அது நாற்றமெடுப்பதால் அவள் பறந்து விடுகிறாள். ஆனால் ஒரு காகத்தினால் அங்கே அமர்ந்து ஒரு நாள் முழுவதும் சாப்பிடவும் முடியும் அதே சமயத்தில் அது கோதுமை வயலுக்கு சென்று புறாவுடன் கூட இணைந்தும் சாப்பிட முடியும். 21. எனவே ஒரு மாய்மாலக்காரன், ஒரு வஞ்சகன், அவனால் உலகத்திற்கு சென்று உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும், உலகத்தாரை போல் நடந்து கொள்ள முடியும், உலகத்தில் வாழ்ந்து உலக இன்பங்களை அனுபவிக்கவும் முடியும், அதே சமயத்தில் சபைக்கு வந்து கிறிஸ்தவனை போன்று பாசாங்கும் செய்ய முடியும். ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்தவன் உலகத்திற்கு சென்று திரும்ப வர முடியாது. அங்கு ஏதோ தவறாயிருக்கிறது. எனவே அதை காண்பிக்கிறது... உன்னுடைய நண்பனை எனக்கு காட்டு, நீ யார் என்பதை நான் கூறுகிறேன். நான் உன்னுடைய வீட்டிற்குள் வந்து நீ என்ன படிக்கிறாய் என்பதை பார்க்கட்டும், நானும் கேட்கிறேன்-எந்த விதமான பாடலை நீ-நீ கேட்டுக் கொண்டிருக்கிறாயென்று. நீ எந்தவிதமான பத்திரிக்கையை, எந்த விதமான இலக்கியத்தை படிக்கிறாய் என்பதை நான் பார்க்கட்டும். உன்னுடைய அலுவலகத்தை நான் பார்க்கட்டும், அதில் ஒரு வேளை அதிக அளவிலான கொச்சையான படங்கள் மற்றும் அது போன்ற காரியங்கள் மாட்டி வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கட்டும். நீ ஒரு கிறிஸ்தவன் என்று என்னிடம் சொல்கிறாய், நான் உன்னிடம் ஒன்றுமே கூறப் போவதில்லை; ஆனாலும் நீ எந்த விதமான கனியை கொடுக்கிறாய் என்பதை என்னுடைய இருதயத்தில் நான் கவனித்துக் கொண்டிருப்பேன் (பாருங்கள்-?), 'ஏனெனில் அதுவே உன்னுடைய உணவு பழக்கமாயிருக்கிறது. ஓ, நீங்கள் கூறலாம், "சகோதரன் பிரன்ஹாமே, நான் சபையை சேர்ந்தவன். நல்லது இப்பொழுது, என்னை நியாயம் தீர்க்கிறது உங்களுடைய வேலையில்லை" என்று. நீங்கள் எப்படிப்பட்டவரென்று நான் நியாயம் தீர்க்கவில்லை. வார்த்தையே உங்களை நியாயம் தீர்க்கிறது. அது சரி. உங்களுடைய கனிகள், உங்களுடைய ஜீவியமே நீங்கள் யார் என்பதை கூறுகிறது. 22. ஓ, என்னே, இந்த பரிசேயனுக்கு இதற்கு பின்னாக ஏதோ ஒரு விதமான உள் நோக்கம் இருந்திருக்க வேண்டும். பரிசேயன் நாங்கள் கென்டக்கியில் அந்த வார்த்தையை அதிகம் பயன் படுத்துவது கிடையாது. பரிசேயன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்றால் என்ன-? பரிசேயன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன-? என்ன-? கிரேக்க பதத்தில், பரிசேயன் என்பதற்கு, "ஒரு நடிகன், நடிக்க கூடிய ஒருவன்" என்று அர்த்தம். ஓ, அதை நான் வெறுக்கிறேன், யாரோ ஒருவர் நடிப்பதை, இல்லாத ஒன்றை போட்டுக் கொள்ள முயற்சிப்பதை. அது போன்ற காரியத்தை நான் இழிவாக கருதுகிறேன். பல நேரங்களில் ஜனங்கள் மற்றவர்களை போன்று நடிக்க முயற்சிக்கின்றனர். கவனியுங்கள், நீங்கள் அடுத்தவனை போன்று நடிப்பதை நிறுத்தி விட்டு, உங்களுக்கு உண்மையென்று படுவதை செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் முன்னேறுவீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். அது சரி. நீங்கள் பாருங்கள், பல சிறிய பிள்ளைகள் திரைப்படம் பார்க்க சென்று விட்டு, வீட்டிற்கு வந்து அந்த நடிகை போன்று நடிக்க விரும்புகின்றனர். உங்களுக்கு வெட்கக்கேடு. ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலிஸில், அங்கே எனக்கு பல கூட்டங்கள் இருந்தது, பெரும்பாலான ஜனங்கள், அமெரிக்கா ஜனங்கள் அந்த முழு சூழலிலும் நடிப்பதற்காகவே வளர்ந்தனர் என்பதை நான் கண்டறிந்தேன். பரிசேயர்களே, நாம் சிறந்த நடிகர்கள். அவர்கள் அப்படிதான் இருக்கிறார்கள்; நீங்கள் அவர்களை பார்க்கலாம்; அவர்கள் எப்பொழுதும் நடித்துக் கொண்டே இருக்கும்படி, திரைக்கு முன்பாக அவர்கள் மிக அதிக நேரம் செலவிடுகிறார்கள் 23. தாங்களே நடிக்கும் வரை அமெரிக்கா ஜனங்கள் தொலைக் காட்சியினூடாகவும், திரைப்படங்களினூடாகவும் மிக அதிகமாக நடிப்பதை பார்த்திருக்கின்றனர்; மிக மிக மோசம். மேலும் சபையிலும் நடிப்பதை காண்கிறோம், நடிகர்களே. ஹ்ம்ம்ம். தேவனுக்கு அவை தேவையில்லை. நாம் நடிகர்களாய் இருப்பது நமக்கு தூரமாயிருக்கட்டும். நீங்கள் நீங்களாகவே இருங்கள்; நீங்கள் அவ்விதம் இருப்பதையே தேவனும் விரும்புகிறார். யாரோ ஒருவர் தன்னால் செய்ய முடியாத ஏதோவொன்றை செய்ய முயற்சிப்பதை காணும்போது, அதை நான் வெறுக்கிறேன். என்னே ஒரு வெட்கக்கேடு, நான் பல சமயங்களில் கவனித்த துண்டு, தேவன் ஜனங்களுக்கு அழகான குரல் வளத்தை அளித்துள்ளார், ஒரு தாலந்தை, இருந்த போதிலும் அவர்கள் அதற்கு மிஞ்சின பயிற்சி அளிக்கின்றனர். ஒரு மிஞ்சின பயிற்சி பெற்ற குரலை நான் கேட்கவே வெறுக்கிறேன், அவர்கள் பாட எழுந்து நிற்கும் போது, அவர்களுடைய முகம் நீல நிறம் ஆகும் வரை எதோ ஒரு இராகத்தை எடுத்துக் கொண்டு அதை மிக நீண்ட நேரம் இழுத்து பிடிக்கின்றனர், சபை கூட்டத்தாருக்கு தங்களால் எவ்வளவு நேரம் இழுத்து பிடித்து பாட முடியும் என்று காண்பிக்கவே அதை செய்கின்றனர், தங்கள் ஜீவியமே அதில் தான் சார்ந்து இருப்பது போல. அவர்கள் கீழே வரும் போது, அந்த ஜனங்கள் தேவனை துதிப்பதில்லை; அவர்களுடைய மனது அவர்களுடைய இராகத்தில் தான் இருக்கிறது. 24. பழைய பாணியிலான பெந்தகோஸ்தே பாடல் முறைகளையே நான் நேசிக்கிறேன் (அது சரி): அங்கே நீங்கள் பியானோ மற்றும் ஆர்கன் என்கிற இசைக் கருவிகளை மறந்து விடுகிறீர்கள்; அங்கே நீங்கள் சடங்கு சம்பிரதாயம் போன்ற செயற்கையான திட்டங்களுக்குள் செல்ல வேண்டியதில்லை. அங்கே நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தி கன்னங்களில் கண்ணீர் வடிய, உங்களால் டூ- ர-மே-பா-சோ-ல-டே என்று பாட முடிகிறதோ இல்லையோ ஆனால் நீங்கள் ஆவியில் பாடுகிறீர்கள். உங்களுடைய இருதயத்திலிருந்து தேவனுக்கு துதியை ஏறெடுங்கள். எல்லா திட்டங்களுக்கும் புறம்பாக, தேவனுடைய திட்டத்திற்குள் செல்ல வேண்டுமானால், நீங்கள் மனிதருடைய திட்டத்திலிருந்து வெளியே வர வேண்டும் (பாருங்கள்-?). அதைவிட்டு வெளியேறுங்கள். ஓ, என்னே, ஒரு நடிகனாய் இருப்பதிலிருந்து என்னை விடுவியும். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்; தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். சில சமயங்களில் ஊழியக்காரர்களும் அப்படி செய்வதை நீங்கள் காண நேரிடும். அவர்கள் பிரசங்க பீடத்திற்கு சென்று, தங்களுடைய குரலை மிகவும் கனத்த குரலாக்கிக் கொண்டு, "நான் என்னுடைய பட்டத்தை இப்பொழுது பெற்றிருக்கிறேன்..." [சகோதரன் பிரான்ஹாம் கனத்த குரலில் பேசிக் காட்டுகிறார்] அது உங்களை நடுங்க வைப்பது போன்றிருக்கும். நான் அவர்களுக்காக வருந்துகிறேன். ஜனங்கள் அதை மெச்சுவதில்லை. நீங்கள், நீங்களாகவே இருந்தால், ஜனங்கள் உங்களை அதிகமாக மெச்சுவார்கள். அதை நீங்கள் நம்பவில்லையா-? வெறுமனே ஒரு பழைய எளிமையான இயற்கை தன்மை மாறாதவராக, செயற்கை சுவை இல்லாமல் ஹிக்கோரி மரப்பட்டையுடன் சேர்த்து சுடப்பட்ட பன்றியின் பின்னந் தொடையாக, சோள வெல்ல பாகாக இருங்கள். அது உங்களுக்கு நன்மையை செய்யும்; நீங்கள் நடிக்கமாட்டீர்கள். 25. ஆனால் ஒரு பரிசேயன், ஓ, அந்த வார்த்தையை நான் வெறுக்கிறேன். ஒரு வஞ்-- ஒரு நடிகன். சில சகோதரிகளும் அதே காரியத்தையே செய்கின்றனர், அவர்களும் அதிகமாக நடிக்கின்றனர். தங்களால் எவ்வளவு விரைவாக கேட்க முடியுமோ அவ்வளவு விரைவாக, ஓ, "ஜான், நீ ஏன் அதை செய்தாய்-?" என்று கேட்டு தங்களுடைய கணவனை மூக்கறுக்கின்றனர். ஓ, என்னே, வியூ ஒரு வேளை அது போன்ற ஆவி உங்களிடம் இருக்குமானால் இனி உங்களிடமிருந்து ஏதும் கேட்பதிலிருந்து தேவன் என்னை விடுவிப்பாராக. ஆனால் தொலை பேசியில் யாரேனும் பேசட்டும், "ஓ, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்-? நீங்கள் என்னை அழைத்ததற்கு நான் மிகவும் மகிழ்கிறேன்." நடிகர்களே, உங்களுக்கு வெட்கக்கேடு-வீட்டிலே தூதர்கள், சாலையிலோ பிசாசுகள் போலியாக இருப்பது. எல்லா நேரங்களிலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். அப்படி இருப்பது தான் சிறந்த வழியாயிருக்கிறது. அதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா-? நிச்சயமாகவே, அப்பொழுது நடிகர்களாக இல்லாமல், பரிசேயர்களாக இல்லாமல், உங்களை எப்படி நடத்தி செல்வதென்று உங்களுக்கே தெரியும், ஞாயிற்றுக் கிழமைகளில் சபைக்கு செல்லும் போது, ஓ, என்னே ஒரு பக்திமானாயிருக்கிறீர்கள் ஆனால் திங்கள் கிழமை காலையில், யாருமே உங்களிடம் வரவே முடியாது. நீ, பரிசேயனே, நீ சபைக்கு செல்வதால் அது உனக்கு என்ன நன்மை செய்கிறது-? ஓ, என்னே, ம்ம்ம். அவர்களுக்கு ஒரு மனந்திரும்புதல் தேவையாய் இருக்கிறது; உங்களுக்கு தேவைப்படுவது அதுவே. அதின் இயற்கையான தன்மையை வெளியே கொண்டு வாருங்கள். அதற்கு மெத்தோடிஸ்டுகள், "ஆமென்" என்று சொல்ல வேண்டும். ஏனெனில் அது மெத்தோடிஸ்டுகளின் உபதேசமாய் இருக்கிறது. நான் சரியாக புரிந்து கொண்டால், அது பரிசுத்தமாக்கப்படுத்தலாய் இருக்கிறது. 26. எல்லாம் சரி. ஓ என்னே. பாசாங்குகாரர்களே, இயேசுவை அழைத்த இந்த பழைய பரிசேயன்; அதற்கு பின்னாக அவன் ஏதோவொன்றை கொண்டிருந்தான். நல்லது. அவர் களைப்பாய் இருந்தார்; இருந்த போதும் அவர் ஜனங்களை பார்த்து கவனித்துக் கொண்டு இருந்தார் அவரால் அரிதாகவே பார்க்க முடிந்தது; அவருக்கு வியர்த்திருந்தது. அவர் தெற்கு பாலஸ்தீனாவிலிருந்து, பின்தொடர்ந்து கண்டு பிடிப்பதற்காக வந்திருந்தார். இப்பொழுது அவரை ஜன கூட்டம் சுற்றியிருந்தது. நாள் முழுவதும் அவர் வியர்வையுடன் நின்றிருந்தார் அதன் வியர்வையுடன், அவர் களைப்பாயிருந்தார். களைப்புற்றவராய், பாலஸ்தீனாவின் சாலைகளில் நடந்து திரிந்து, அதினால் சாலைகளிலிருந்த முழு தூசியும் சாணமும் படிந்தவராயிருந்தார். எப்பொழுதாவது ஒரு முறை அவர் நிறுத்தி, சிறிது தண்ணீர் குடிப்பார். எனினும் அவர் தன்னுடைய தலையை உயர்த்தி, மறுபடியும் பார்த்து, சிறிது பெருமூச்சு விட்டு, "நல்லது, அவனை கண்டுபிடித்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்பார். பின்பு நீண்ட நேர பிரசங்கத்திற்கு பின்னர், ஜனக்கூட்டமானது சிறிது களைந்து போன பிறகு, அவன் முழங்கையால் தள்ளி கொண்டு உள்ளே வந்தான். அவன் ஒரு செய்தியை கொண்டு இருந்தான்; அவன் தன்னுடைய வழியிலிருந்தான். அவனுக்கு ஒரு எஜமானிருந்தான்; அந்த எஜமானுடய பெயர் சீமோன், ஒரு பரிசேயன். அவன் ஒரு தூதுவனாயிருந்தான்; அவன் இந்த வேலையை முடிக்க வேண்டியிருந்தது. அவன் இயேசுவினிடத்தில் செல்ல வேண்டியிருந்தது. ஒரு கால் கழுவும் வேலைக்காரன், பாலஸ்தீனாவில் அவர்கள் அப்படித்தான் அழைக்கப் பட்டார்கள். வெறுமனே ஒரு - அது போன்ற பலரை அந்த பரிசேயன் கொண்டிருந்தான். எல்லா வேலையும் செய்வார்கள். அவர்களின் குதிரைகளை பராமரிப்பது, அவர்களின் தோட்டங்களை பார்த்துக் கொள்வது மேலும் அது போன்று பலவற்றை கவனித்து கொள்வார்கள்: அவர்களுக்கு கிடைப்பதிலிருந்து வெறும் கொஞ்சம் மட்டுமே கால் கழுவும் வேலைக்காரர்களுக்கென கொடுக்கப்படும். 27. இந்த கால் கழுவும் வேலைக்காரன் ஒரு வேளை 2 அல்லது 3 நாட்களாக பின்தொடர்ந்து, கண்டு பிடிக்க முயற்சித்து கொண்டிருந்திருக்கலாம். ஏனெனில் அவனுடைய எஜமான் அவனுக்கு ஒரு--ஒரு--ஒரு உத்தரவை கட்டளையிட்டிருந்தான். அது என்னவென்றால் அவன் சென்று இயேசுவை கண்டுபிடித்து தன் எஜமானுடைய வீட்டில் குறிப்பிட்ட நேரத்தில் போஜனம் பண்ண வரும்படி அழைப்பதே. அந்த ஜனக்கூட்டத்தினூடாக அவன் தன் முழங்கையை வைத்து தள்ளிக் கொண்டு செல்வதை நான் காண்கிறேன், அவன் தள்ளாடிக் கொண்டு எதிர்பட்டான். ஒருவேளை, அது பேதுருவா அல்லது அது அந்திரேயாவா-? நான் அங்கே இருக்கவில்லை; எனக்கு தெரியாது, ஆனால் அவன் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது. "ஐயா, நான் உங்களுடைய போதகரை சந்திக்க விரும்புகிறேன்” என்று. மேலும் நிச்சயமாகவே அந்த அன்பார்ந்த சீஷர்கள், இயேசு வியாதியஸ்தர்களுக்காக மற்றும் அது போன்ற காரியத்திற்காக ஜெபித்து கொண்டிருந்த போது ஜனங்கள் அவரை நெருங்காதபடிக்கு எவ்வளவாய் அந்த சீஷர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தனர். மறுபடியும் அவன் கூறினான், "உங்களுடைய போதகரை நான் சந்திக்க விரும்புகிறேன்" என்று. எனவே அந்திரேயா அவனை இயேசு இருந்த இடத்திற்கு மிக அருகாமையில் கொண்டு செல்வதை நான் காண்கிறேன், அங்கே பிணியாளிகளும் மற்றவர்களும் சுற்றி இருந்தனர்; அவன் கூறினான், "போதகரே, இங்கிருக்கும் இந்த - இந்த இளைஞன் தெற்கு பாலஸ்தீனாவிலிருந்து ஒரு செய்தியுடன் வந்திருக்கிறான். அவன் வெகு தூரம் பிரயாணம் செய்து வந்திருக்கிறான். அந்த செய்தி அவனுடைய எஜமானிடம் இருந்து வந்திருக்கிறதாம். எனவே அவன் உங்களுடன் பேச விரும்புகிறான்." என்றான். 28. அவன் கூறினான்... அவன் அவரை வணங்கி தன்னுடைய தூதை பற்றி கூறினான். அது என்னவென்றால் அது அவனுடைய எஜமானின் விருப்பம், அதாவது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அவர் வந்து தன்னுடன் போஜனம் பண்ண வேண்டும் என்பதே. ஒரு வேளை நீங்களாவது அல்லது நானாவது அங்கே இருந்திருந்தால், அதனை நாம் எவ்வளவு வேறு விதமாக கண்டிருப்போம். நாம் கூறியிருப்போம், "போதகரே, அந்த மாய்மாலக்காரன் இடத்திற்கு போக வேண்டாம். அந்த பரிசேயனிடத்திற்கு போக வேண்டாம். ஏனெனில், அவன் ஒரு குருடன்; அவனுக்கு தெரியாது- அவன் உங்களை வெறுக்கிறான். மேலும் இங்கே பல பிணியாளி ஜனங்களும் மற்றவர்களும் சுற்றியிருக்கின்றனர்; உங்களுடைய அதிகப்படியான பெலன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது போன்ற நபரிடம் நீங்கள் செல்ல வேண்டாம்; அவன் வெறுமனே உங்களை பயன்படுத்த முயற்சிக்கிறான். பழைய பழமொழியில் சொல்வது போன்று, ஒரு துருப்பு சீட்டு போன்று அல்லது ஏதோ ஓன்று அவன் அவன் அதை குறித்து ஏதோ ஒரு விதமான தவறான மாற்று காரியத்தை கொண்டு இருக்கிறான். அது போன்ற ஒரு மனிதனிடம் போக வேண்டாம்” ஓ என்னே, அந்த பரிசேயனை என்னால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறது. பெரிய மனிதன், அவனுடைய பட்டணத்தில் பெரிய மனிதன், சில நாட்களுக்கு முன்பு வாசனை திரவியத்தால் நறுமணம் வீசும் தன்னுடைய உணவு அறையில், எகிப்தில் தயாரிக்கப்பட்ட கம்பளத்தின் மீது நடந்து கொண்டு இருந்தான் தன்னுடைய கொழுத்த கைகளை ஒன்றாக தேய்த்துக் கொண்டு இருந்தான், அவன் கொழு கொழுவென இருந்தான், வெறுமனே கொழுத்தவனாய், அவன் கூறினான், "ஏன் அதை பற்றி நான் முன்பே சிந்திக்கவில்லை-? ஆஹ்-ஆஹ்-ஆஹ்-ஆஹ். ஏன் நிச்சயமாகவே அது தான் எனக்கு வேண்டும். அவ்வளவே தான். என்னவென்று நான் உனக்கு சொல்கிறேன்; நான் ஏற்பாடு செய்திருக்கும் என்னுடைய பெரிய விருந்தோம்பலில்: அதை பற்றி நான் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே சிந்தித்திருக்க வேண்டும். ஆஹ்-ஆஹ்-ஆம் இங்கிருக்கும் அந்த ஆளை உனக்கு தெரியுமா, எல்லா ஏழை ஜனங்களும் பேசும் நாசரேத்தின் இயேசுவை பற்றி மேலும் என்னவென்று உனக்கு சொல்கிறேன், இங்கே என்னுடைய விருந்தில் நான் அவரை கொண்டு இருப்பேனென்றால், அப்பொழுது எல்லா இடங்களிலும் ஆர்வத்துடன் ஜனங்கள் சுற்றி நின்று அவரை பார்த்துக் கொண்டிருப்பார்கள். நான் செய்ய வேண்டியது அவ்வளவே தான், மேலும் என்னவென்று உனக்கு தெரியுமா-? இந்த பட்டணத்தில் நான் தான் மிகவும் புகழ்பெற்ற மனிதனாய் இருப்பேன். என்னுடைய புகழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தி கொள்வேன். ஓ, அதை நான் முன்னமே சிந்தித்திருக்க வேண்டும்." எனவே அவரை கண்டுபிடிக்கும்படி அந்த பையனை சாலையில் அனுப்பி வைத்தான். ”டாக்டர் ஜோன்ஸ் கூறப் போவதை பற்றி நீ என்ன நினைக்கிறாய்-? அந்த பரிசேயனாகிய ஜோன்ஸ், அவன் நாசரேத்தை சேர்ந்த இயேசுவை வெறுக்கிறான். அவர், ஒரு பிசாசு என்று அவன் நம்புகிறான். மேலும் நியாயசாஸ்திர் இன்னார் இன்னாருக்கு அது நன்றாயிருக்குமா. அவர்களை எல்லாம் நான் இங்கே கொண்டிருக்கும் போது-? நிச்சயமாகவே பட்டணத்தில் இருக்கும் எல்லா பிரபலங்களும் என்னுடைய கூட்டத்திற்கு வருவார்கள், நிச்சயமாக. ஏனெனில் என்னால் அவர்களை நன்றாக போஷிக்க முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள்." நிச்சயமாகவே, இந்த பரிசேயன் ஒரு ஐசுவரியவானாய் இருந்தான். அவனிடம் மிக அதிகமிருந்தது; அவன் எதையெல்லாம் விரும்பினானோ அதை எல்லாம் அவனால் செய்ய முடியும். அவன் தேவாலயத்திலிருந்து வரும் இறைச்சியின் எல்லா துண்டுகளையும் பெற்று இருந்தான். இறைச்சி துண்டுகளில் அவனுக்கு பங்கிருந்தது. மேலும் அவனுக்கு எல்லா தசம பாகங்களிலும், காணிக்கைகளிலும் மற்றும் உள்ளே வரும் ஒவ்வொரு பொருளிலும் அவனுக்கு பங்கிருந்தது. அவனிடம் மிக அதிகமிருந்தது. 29. நல்லது, அது போன்ற ஒரு விருந்தை அளிப்பதற்கு என்ன தேவைப்படுகிறதோ, அதைக் கொண்டு பாலஸ்தீனாவிலிருக்கும் ஒரு சாதாரண குடும்பத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு உணவு அளிக்க முடியும். ஆனால் ஓ, அவன் ஒரு--அவன் பட்டணத்தில் ஒரு பெரிய ஆளாக இருந்தான். டாக்டர் சீமோன் பரிசேயன், என்னே ஒரு ஆளாயிருந்தான் பாருங்கள். என்னால் அவன் முன்னும் பின்னும் நடந்து கூறுபவைகளை காண முடிகிறது, "நிச்சயமாக, ஓ, என்னே, என்னுடைய அழைப்பை இப்பொழுதே உடனடியாக அனுப்புகிறேன். நல்லது, என்னவென்று உனக்கு தெரியுமா, அந்த எனவே எல்லா ஜனங்களாலும் என்னை காண முடியும், வெளியிலே குளிர்ச்சியான பகுதியில் அதை நான் அமைப்பேன், வராண்டாவிற்கு அந்த பக்கத்தில். அந்த சிறப்பான பெரிய--அங்கிருக்கும் என்னுடைய இடத்திற்கு செல்வேன், திராட்சை தோட்டத்திற்கு, அங்கே அழகிய திராட்சை குலைகள் தொங்கிக் கொண்டிருக்கும் மேலும் அவை இப்பொழுதே... அவை நன்கு பழுத்திருக்கிறது. அதின் -- திராட்சை பழங்களின் நறுமணம் மிகவும் அழகானது. அவை எல்லாவற்றையும் நான் அங்கே வைத்திருப்பேன். என்னுடைய மிக சிறப்பான பெரிய மேஜையை எடுத்து அங்கே வைப்பேன். அங்கே டாக்டர் ஜோன்ஸ் என்னுடன் இருப்பான், மேலும் டாக்டர் இன்னார் இன்னார் மற்றும் டாக்டர் இன்னார் இன்னார் மற்றும் டாக்டர் இன்னார் இன்னார் அங்கே இருப்பார்கள். எனவே முழு நகரமும் நான் தான் மகத்தான மனிதன் என்பதை அறிந்து கொள்ளும், அதாவது என்னுடைய பட்டம் எனக்கு நன்மை செய்தது என்று, ஆகவே நான் ஒரு மகத்தான மனிதன். நான், நான், நான், நான், நான்," அவ்வளவே தான் உங்களால் கேட்க முடிந்தது. "நான் இதை செய்தேன்; நான் சிறப்பாக இருப்பேன்; நான் இதை செய்வேன்.” நான், நான், நான், கிறிஸ்துவிற்கோ இடமில்லை. 30. அது இன்றைக்கு நடக்கும் காட்சி போன்று இருக்கிறதல்லவா-? நான் இதை - இதை செய்வேன். நான் அந்த சபையை சேர்ந்து கொள்வேன்; நான் இதை செய்வேன்; நான் அதை செய்வேன். தேவனே எங்கள் மீது இரக்கமாயிரும். அங்கே தான் அவனிருந்தான், ஓ, அவன் ஒரு பெரிய ஆளாயிருந்தான், மேலும் இயேசுவை அங்கே வெறுமனே காட்சிப்பொருளாக கொண்டு இருக்கப் போவதால் இன்னமும் பெரிய ஆளாக போகிறான். இயேசு தீர்க்க தரிசியாய் இருந்தும், அவர் ஒரு தீர்க்கதரிசி என்று அவன் விசுவாசிக்கவில்லை. அவர் தேவ குமாரனாயிருந்தும், அவர் தேவனுடைய குமாரன் என்று அவன் விசுவாசிக்கவில்லை. ஆனால் அவன் நினைத்தான், "நான் அந்த நபரை அங்கே கொண்டு இருப்பேனானால், எங்களுக்கெல்லாம் கொஞ்சம் வேடிக்கையாயிருக்குமென்று." எனவே அவரை கண்டு பிடிக்கும்படி அனுப்பினான். இயேசு ஒரு போதும், ஒரு போதும் வாக்கை மீறுபவரல்ல. நாட்கள் கடந்தன; பல காரியங்கள் சம்பவித்து விட்டது. இருந்த போதும் இந்த பரிசேயனுடைய--இந்த கூட்டத்திற்கு அல்லது அவனுடன் போஜனம் பண்ண சமயம் வந்தது, எனவே இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கூறினார், "இப்பொழுதே நாம் செல்லலாம், சரியாக பாலஸ்தீனாவிலிருந்து தெற்கு பாலஸ்தீனத்திற்கு, சாலை பயணத்தை ஆரம்பிக்கலாம், ஏனெனில் நாம் தாமதமாக செல்ல கூடாது" என்றார். இயேசு ஒரு போதும் வாக்குத்தத்தத்தை மீறமாட்டார். அவர் எப்பொழுதுமே தம்முடைய வாக்குத்தத்தத்தை காத்துக் கொள்கிறார். அது என்னவாயிருந்தாலும் சரி, அதை அவர் காத்துக் கொள்வார். நாட்கள் நெருங்கியது, முற்றத்தில் அந்த பரிசேயன் தன்னுடைய மேஜையில் அமர்ந்திருப்பதை நாம் காண்கிறோம். மேலும் அவனுடைய விளம்பரங்கள் வெளியே சென்று விட்டதால், எல்லா ஜனங்களும் அங்கே ஒன்று கூட ஆரம்பித்தனர். என்னே ஒரு பெரிய ஆளாய் இருந்தான் இவன். 31. டாக்டர் ஜோன்ஸ் தன்னுடைய சிறந்த பெரிய இரதத்தில் வந்துவிட்டான். அவன் தன்னுடைய அந்த கால் கழுவும் வேலைக்காரர்களை துரிதமாக ஓட்டுகிறான், அவன் சென்று குதிரையை பிடித்து, அதை தொழுவத்திற்கு ஒட்டி செல்கிறான். அவனுடைய குதிரையை வேலைக்காரன் பராமரித்து கொள்கிறான். மேலும் அவன், "என்னுடைய சிநேகிதனே, நீ எப்படி இருக்கிறாய்-? உன்னை காண்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நீ உள்ளே வரமாட்டாயா-? வந்து என்னுடன் சிறிது நேரம் பார்வையிட மாட்டாயா-?" ஓ, அவன் அது போன்று அடுக்கிக் கொண்டே போவதை என்னால் காண முடிகிறது. "நீ உள்ளே வரமாட்டாயா-? இதோ இங்கே நியாய சாஸ்திரி இன்னார் இன்னார் இருக்கிறார்; என் சிநேகிதனே, உன்னை காண்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நீ உள்ளே வர மாட்டாயா-? வேலைக்காரனே, இந்த குதிரையை தொழுவத்திற்கு கூட்டி செல்" ஓ, என்னே. ஆனால் அவன் சிறிது நேரத்திற்கு பின்னர் உள்ளே சென்று, கண்ணாடி டம்ளரின் முனைப் பகுதியை மற்றவர்களுடன் உரசினான் மற்றும் அது போன்றவைகளை செய்தான். மேலும் அங்கே -- பாலஸ்தீனாவில் அவர்கள் போஜனத்தை ஏற்பாடு செய்யும் போது, நீங்கள் அங்கே எப்பொழுதாவது இருந்திருந்தால், அவர்கள் ஒரு பெரிய சிறந்த மேஜையை வைப்பார்கள், இந்த விதமாக வெளியே, மேலும் அதின் கூடவே அவர்கள்... இங்கே நீங்கள் செய்வது போன்று, பாலஸ்தீனாவில் நீங்கள் உட்கார்ந்து கொண்டு சாப்பிடமாட்டீர்கள். நீங்கள் படுத்தவாறே சாப்பிடுவீர்கள். அவர்கள் சோபா போன்ற ஒன்றை வைத்திருப்பார்கள், அதனை அவர்கள் மேஜைக்கு பக்கத்தில் கோண வழிகளில் வைத்திருப்பார்கள், இவ்விதமாக. எனவே ஒவ்வொரு மனிதனும் இவ்விதமாக கீழே படுத்து, படுத்துக் கொண்டிருக்கும் நிலையிலே சாப்பிடுவான், அவனுடைய பாதம் அவனுக்கு பின்னாக இருக்கும். மேலும் அவர்கள் எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தியிருந்தனர், அவர்கள் எல்லாரும் அங்கே மகிழ்ந்து கொண்டும் அது போன்ற மற்ற காரியங்களிலும் இருந்தார்கள், பரிசேயன் தன்னுடைய பெரிய ஆட்களை மகிழ்விப்பதில் ஒரு சிறந்த தருணத்தை கொண்டிருந்தான். நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முதல் காரியம், இயேசு வந்து விட்டார், வந்து வீட்டிற்குள் சென்று அமர்ந்தார்; மேலும் அவர் அங்கே இருப்பதை அவர்கள் அறியவில்லை. ஒருவருமே அதைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை. அவர் எங்கே இருந்து வந்தார் என்று-? 32. இப்பொழுது, வெறும் ஒரு சிறிய இடம், ஒரு வேளை ஒரு மூலையில் அமர்ந்திருக்கலாம். பரிசேயன் முழுவதுமாக வேலையில் அமிழ்ந்திருந்தான்; அவன் மற்ற காரியங்களை செய்ய வேண்டியிருந்தது. அந்த பெயர் பெற்ற மனிதர்கள், நகரத்தின் பெரிய ஆட்கள் அங்கே இருந்தனர், எனவே அவன் அவர்களை கவனிக்க வேண்டியிருந்தது. நான் வியக்கிறேன், சகோதரர்களே மற்றும் சகோதரிகளே, பிரபலங்களையும் மற்றும் பிரமுகர்களையும் மகிழ்விக்க நாம் அதிகமான நேரம் ஒதுக்கவில்லையென்றால், அதாவது இயேசுவும் நம் மத்தியில் தான் அமர்ந்திருக்கிறார் என்பதை நாம் மறந்து விடுகிறோம், ஒரு ஓரத்தில் அமர்ந்து இருக்கிறார், ஒருவருமே அவரை கவனிக்க வில்லை. தனியாக அமர்ந்திருக்கிறார், அவருடைய சீஷர்களால் உள்ளே வரமுடியாது; ஏனெனில் அவர்களுக்கு அழைப்புகூட கொடுக்கப் படவில்லை. எனவே வரவேற்கப்படாத அந்த எல்லா கிழக்கத்தியர்களும், வெளியே நின்ற வண்ணமாய் உள்ளே பார்த்து, வியந்துக் கொண்டிருந்தனர்; மேலும் எதாவது நடந்து கொண்டிருக்கும் போது, ஓ நீங்கள் ஜன கூட்டத்தை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை; எப்படியாயினும் அவர்கள் அனைவரும் அங்கே இருக்கின்றனர். அவர்கள் பார்க்கவே வருகின்றனர், பார்வையாளர்கள், அவர்களால் என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். அவர்கள் உள்ளே அனுமதிக்கப் படவில்லை, ஆனாலும் அவர்கள் வந்து பார்வையிடுகின்றனர். விருந்தோம்பலை மணி கணக்காக தங்களுடைய நுனி கால்விரல்களில் நின்றபடியே பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். காரம் சேர்க்கப்பட்ட இறைச்சியை, சிறந்த மசாலாக்களால் சுடப்பட்ட ஆட்டை பார்க்கும் போது ஏழைகள் வாயில் எச்சில் ஊற நின்றுகொண்டிருந்தனர். ஓ, எல்லா சிறந்த பொருட்களும் எகிப்து மற்றும் மெசபொத்தோமியா மற்றும் அது போன்ற நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. 33. ஏனென்றால், இந்த பரிசேயன் ஒரு ஐசுவரியவானாயிருந்தான், அவனால் உண்மையாகவே அது போன்று ஒரு பெரிய போஜனத்தை ஆயத்தம் செய்ய முடியும். வேண்டுமானால் ஏழைகள் வாயை பிளந்தவாறு நின்று கொண்டே இருக்கட்டும். அந்த கூட்டம் தான் உலகத்தையே கிழித்து புறஜாதியாரிலிருந்து ஒருவனை மார்க்கத்தானாக்குகிறார்கள், மேலும் அவன் ஆரம்பத்தில் இருந்ததை காட்டிலும் அவனை இரட்டிப்பான நரகத்தின் மகனாக்குகிறார்கள். பெருமை, ஆடம்பரம், அவன் அப்படித் தான் இருந்தான், கைவிடப்பட்டவராய் இயேசு அமர்ந்திருந்தார். அவர் அசௌகரியமாக உணர்ந்தார் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். ஏனெனில் அவருடைய பாதங்கள் அழுக்காயிருந்தது. ஜனங்கள் பாலஸ்தீனாவில் பயணம் செய்யும் போது; இப்பொழுது நமக்கு இருப்பது போன்று நடை பாதைகளோ, சாலைகளோ, எண்ணெய் பூசப்பட்ட சாலைகளோ அவர்களுக்கு அந்த நாட்களில் இருக்கவில்லை. அங்கே தன்னுடைய பாதங்களும் கால்களும் அழுக்கு படிந்ததாய், தன்னுடைய தலை அபிஷேகிக்கபடாததாய், தன்னுடைய கன்னங்களில் முத்தம் பெறாதவராய் அவர் அமர்ந்திருந்தார். மேலும் அவருடைய கால்களில் அந்த பழைய சாணத்தின் புழுதிகளும் மற்றும் சாலையின் தூசிகளும் படிந்திருந்தது. அந்த புழுதிகள் குதிரைகளினால் ஆனவை, வணிகர் வண்டிகளில், சுமை இழுக்கும் மிருகங்கள் சுமையை ஏற்றி இழுத்துக் கொண்டு செல்லும் போது, மிருகங்களின் சாணங்கள் சாலையின் மேல் விழுந்து, பறவைகள் கீழே வந்து அதை இங்கும் அங்குமாக சிதறடித்து கொத்திக் கொண்டு இருக்கும், எனவே சிறிது நேரத்திற்கு பின்னர் அது புழுதியாகிவிடும். 34. ஆகவே மனிதன் நடக்கும் போது... பாலஸ்தீனாவில் உள்ளே அணியும் ஆடை முழங்கால் வரை இருக்கும், அதற்கு மேலாகத் தான் அங்கி அணியப்படும், அவர்கள் நடக்கும் போது, ஆடையானது முன்னும் பின்னும் அசைவதால் ஏற்படும் மெல்லிய காற்று புழுதியை கிளப்பும். ஓ அது அனைத்தும் உங்கள் மீது படியும் போது அது துர்நாற்றம் வீசும் அருவருப்பான அழுக்காகி விடுகிறது. அவ்வாறு தான் இயேசு அழுக்கான பாதங்களுடன் அமர்ந்திருந்தார். இயேசுவை, அழுக்கான பாதங்களுடையவராய் அவர்கள் அழைத்தனர். ஓ. அதை நான் கூறும் போது அது எனக்கு ஏதோவொன்றை செய்கிறது. அழைக்கப்பட்ட பின்பு இயேசு கவனிக்கப் படாதவராய், இயேசு அழுக்கான பாதங்களுடையவராய், வேடிக்கைப் பொருளாயிருந்தார். நான் வியக்கிறேன் நீங்கள் ஒரு ஜெப கூட்டத்தை கொண்டிருக்கும் போது, உங்களுடைய சபைக்கு அவரை அழைக்கிறீர்கள், அப்பொழுது அவர் உங்களுக்காக ஏதோவொன்றை செய்ய கீழே வருகிறார், ஆனால் நீங்கள் அவரை கவனிக்காமல் விட்டு விடுகிறீர்கள். நமது குடும்ப வாழ்க்கையிலும் மற்றும் எல்லாவிடங்களிலும் அது போன்று தான் இருக்கிறது. ஜனாதிபதி வரும் போதோ, ஏன், என்னே, இரயில் தொடங்கி தங்கும் விடுதியினுள் செல்லும் வரைக்கும் அவர்கள் கம்பளத்தை விரிகின்றனர். அவர்கள் சாலையில் இருப்பவர்களை ஒதுக்குகின்றனர், வாலிப பெண்கள் பூக்களுடன் முன்னே செல்கின்றனர், மேலும் அவர்கள் நடைபாதைகளில் பூங்கொத்தை வைத்து, வரவேற்புக்கான எல்லா அடையாளங்களுடன் கொடிகளை தொங்க விடுகின்றனர், ஆனால் இயேசு நகரத்திற்கு வரும் போது, எங்கோ ஒரு சிறிய குழுவில் தங்கி, பைத்தியக்காரனென்றும், பரிசுத்த-உருளை என்றும் அழைக்கப்பட வேண்டும். ஓ. என்னே. 35. ஓ. குருட்டு பரிசேயர்களே, நீங்கள், அழுக்கான பாதங்களுடன் இருக்கும் இயேசுவை கவனியுங்கள். இயேசு, அவருடைய பாதங்கள் வெகு விரைவில் உலகத்தின் பாவங்களுக்காக உருவ குத்தப்படவிருக்கிறது. அவைகள் புழுதியினாலும் சாணங்களினாலும் நிறைந்து அசௌகரியமாயிருந்தது. எப்படியாயினும் வழக்கமாகவே ஐசுவரியவான்களின் கூட்டத்தின் மத்தியில் இயேசு அசௌகரியமாகத் தான் இருக்கிறார். அவர்கள் அவருக்கு எந்த இடத்தையும் கொடுப்பதில்லை, அல்லது எதையுமே கொடுப்பதில்லை, வெறுமனே அமர்ந்து இருக்கட்டும் என்று விட்டு விடுகின்றனர், "ஓ, உங்களுடைய வாயினால் என்னை துதிக்கிறீர்கள், ஆனால் உங்களுடைய இருதயமோ வெகு தூரமாயிருக்கிறது." என்று போதகர் கூறினார். இயேசு அழுக்கான பாதங்களுடையவராய், கவனிக்கப்படாதவராய், கழுவப்படாதவராய், வரவேற்கப்படாதவராய் அங்கே அமர்ந்திருந்தார். "இயேசுவே, நீர் ஒரு சிறிய இடத்தில் இருப்பீரா-? இயேசுவே, ஒரு வீட்டிற்கு நீர் அழைக்கப்பட்டிருக்கும் போது ஒரு மிக சிறிய இடத்தில் இருப்பீரா " என்று கேட்கலாம். "ஆம், நான்--நான் அந்த சிறிய இடத்தில் இருப்பேன்" என்பார். "என்ன-?" "மேல் மாடியில் ஒரு சிறிய அறையில் அல்லது ஒரு வேளை இரண்டாவது மாடியில், ஒரு சிறிய மறைவிடத்தில், அல்லது கீழே இருக்கும் அறையில்," பேர் பெற்ற மனிதர்களுக்கு முன்பாக, உங்களுடைய தோழமைக்கு முன்பாக அவரை குறித்து நீங்கள் வெட்கப்படுகிறீர்கள். நீங்கள் பயப்படுகிறீர்கள் அல்லது அவரை குறித்து சாட்சி கொடுக்க அவருடைய இரட்சிப்பின் கிருபையை பற்றி சாட்சி கொடுக்க வெட்கப்படுகிறீர்கள், "ஆனால் எப்படியாயினும் வருவீரா, இயேசுவே -?* ஆமாம். எப்படியாயினும் நான் வருவேன்." அது எனக்கு நிரூபிக்கிறது அவர் தான் கர்த்தாதி கர்த்தர் என்று, அவர் ஒரு மிகப்பெரிய நபரென்று. "நான் எப்படியாயினும் வருவேன், எனக்காக நீ எவ்வளவு ஒரு சிறிய இடத்தை கொடுத்தாலும் பரவாயில்லை, எப்படி இருந்தாலும் நான் வருவேன்." அது எனக்கு பிரியம், அவர் என்னுடைய கர்த்தர். "எப்படியாயினும் நான் வருவேன், அந்த இடம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, நான் வருவேன்." ஜனாதிபதிக்கு நீங்கள் எல்லாவற்றையும் கொடுத்திருந்தாலும், டாக்டர் ஜோன்சுக்கு நீங்கள் ஒரு சிறந்த வரவேற்பை கொடுத்திருக்கலாம், ஆனால் இயேசு வந்த போதோ, எங்கோ ஒரு மூலையில் இருந்தார். என்னே ஒரு கூட்ட பரிசேயர்கள், போலிதனம், கேளிக்கையாளர்கள், அன்பு இல்லாதவர்கள், கேளிக்கையாளர்கள். "நான் அந்த சிறிய இடத்தை எடுத்துக் கொள்வேன்." 36. நீண்ட நாட்களுக்கு முன்பு, கிறிஸ்தவர்களே, நீங்கள் உங்களுடைய இருதயத்தை திறப்பதற்கு முன்னர், நீங்கள் அவரை எப்படி உபசரித்தீர்கள்-? ஜனங்களே உங்களில் சிலர் கிறிஸ்தவர்கள் என்று உரிமை கொண்டாடினீர்கள், அவரை எவ்வாறு நீங்கள் உபசரித்தீர்கள்-? ஓ, என்னே, ஓ, எப்பொழுதாவது ஒரு முறை குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை நீங்கள் அனுமதித்தீர்கள், ஏதோ ஒரு விதமான வறட்சியான சுவிசேஷகரை அனுமதித்தீர்கள், அப்பொழுது நீங்கள் உங்களுடைய மிக-மிக அழகான ஆடையை மற்றும் உங்களுடைய தொப்பியை அணிந்து கொண்டு நீங்கள் சபைக்கு சென்றீர்கள். அவருக்கு நீங்கள் ஆராதனைக்கான எந்த ஒரு இடத்தையும் கொடுக்கவில்லை; நீங்கள் சாட்சியிடவுமில்லை. ஆனாலும் அவர், உங்களை கடிந்து கொள்ளவும் இல்லை, உங்களை குற்றப்படுத்தவுமில்லை. அவர் அந்த சிறிய இடத்தை எடுத்துக்கொள்ள விரும்புகிறார். நீங்கள் உங்கள் முழு இருதயத்தையும் அவருக்கு கொடுக்க மாட்டீர்கள்; அவருக்கென நீங்கள் ஒதுக்கும் சிறிய இடத்தை அவர் எடுத்துக் கொள்கிறார். அவர் என்னுடைய கர்த்தர். நீங்கள் வீட்டிற்கு சென்று, "ஓ. நல்லது. அடுத்த மாதம் வரைக்கும் அதுவே போதும்; நான் மறுபடியும் சபைக்கு போவேன்." 37. நீங்கள் எப்படியாய் அவரை வெளியேற்றினீர்கள், உங்களுடைய தேவையற்ற விருந்துகள் மற்றும் உங்களுடைய சிறிய காரியங்கள் உங்களுடைய பொழுது போக்குகள். ஏன் அப்படி செய்தாய் பரிசேயனே. இயேசுவை என் கர்த்தரை அப்படி செய்யும் உனக்கு வெட்கக்கேடு. அவர் நகரத்திற்கு வரும் போது. அவரை குறித்து பொல்லாப்பாய் பேசுகிறாய். அவரை நீ கீழே போடுகிறாய். உன்னுடைய கண்களை திற. அவர் உன்னை சந்திக்க வருகிறார். உன்னுடைய ஜெபக் கூட்டத்திற்கு வரும்படிக்கு அவரை நீ அழைத்தாய், ஆனால் அவர் வந்த போதோ அவருக்கு நீ எந்த ஒரு இடத்தையும் கொடுக்க விரும்பவில்லை. என்னே ஒரு பரிதாபமான நிலை. எவ்வளவாய் ஜனங்கள் குருடாயிருக்க முடியும் இயேசுவின் பாதத்தண்டை சென்ற இந்த தூது கொண்டு செல்பவனுக்கு என்னே ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஓ, அவனுடைய இடத்தை நான் எடுத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அந்நாளில் அந்த இடத்தில் நான் இருந்திருக்க வேண்டுமென விரும்புகிறேன். ஏதோ ஒரு பரிசேயன் சொன்னதை அறிவிப்பதை காட்டிலும் நான் மிகவும் அதிகமானதை செய்திருப்பேன். நான் அவரை கட்டியணைத்திருப்பேன். இயேசுவின் பிரசன்னத்தில் நிற்கும் சந்தர்ப்பத்தை நான் அறிந்த மாத்திரத்தில் என்னால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்திருப்பேன். அந்நாளில் குருட்டு ஜனங்கள் இருந்தது போலவே, இன்றும் அவர்கள் இருக்கின்றனர். ஆழ்ந்த சிந்தையுடன், கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படி ஜனங்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது, ஆனால் விலகி நடந்து, அவரை தொழுது கொள்ளாமல், அவரை வரவேற்காமால் விட்டு செல்கின்றனர். 38. உங்களுக்கு தெரியுமா, பாலஸ்தீன நாட்டின் வழக்கம் என்னவென்றால், அது போன்ற ஒரு இராஜ விருந்திற்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது நடக்கும் முதல் காரியமாவது, நீங்கள் வாசலண்டை வரும் போது நீங்கள் முழுவதும் அழுக்காக துர்நாற்றம் வீசுபவராக இருக்கிறீர்கள்; அப்பொழுது நீங்கள்-- நீங்கள் விருந்திற்கு ஏற்ற நபராக இல்லை. அந்த அழகிய வீடுகளில் உங்கள் பாதங்களில் படிந்து இருப்பவைகளோடும் மற்றவைகளோடும் நடப்பதற்கு நீங்கள் சங்கடப்படுவீர்கள். மேலும் நீங்கள் பார்ப்பதற்கு வியர்த்தவராய் மற்றும் எல்லாவற்றோடும் இருக்கிறீர்கள். முதல் காரியம் என்ன-? விருந்தாளி வரும் போது, அவர்கள் பாதம் கழுவும் வேலைக்காரனை கொண்டிருக்கின்றனர். வேலையில் மிகவும் குறைந்த சம்பளம் வாங்கும் மனிதன். என்னுடைய கர்த்தர் தன்னுடைய அரையிலே கட்டிக் கொண்டு ஜனங்களின் பாதத்தை கழுவினதை நான் நினைக்கும் போது, அவர் -- மிகவும் உயர்ந்த ஸ்தானத்திற்கு பாத்திரராய் இருந்தார். ஆனால் அவரோ மிகவும் தாழ்மையான ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார், அவர்களின் பாதத்தில் படிந்திருந்த சாணத்தையும் புழுதியையும் கழுவுவதற்கு, வேலைக்காரர்களிலேயே மிகவும் தாழ்மையானவரானார். வேறெந்த ஒரு வேலைக்காரனும் பாதம் கழுவும் வேலைக்காரனின் வேலையை விட தாழ்மையான வேலையை பெற்று இருக்கவில்லை. ஆனால் நீங்கள் கிழக்கத்திய நாடுகளில், பாலஸ்தீனத்தில் அது போன்ற பாணியிலான ஒரு ஒரு வீட்டிற்கு வரும் போது, கதவண்டையிலே ஒரு கால் கழுவும் வேலைக்காரன் உங்களை சந்தித்து, கிணறுகளில் ஒன்றிற்கு சென்று ஒரு பெரிய பாத்திரம் நிறைய நல்ல தூய்மையான தண்ணீரை கொண்டு வந்து, உங்கள் காலணிகளை அல்லது பாதரட்சைகளை கழற்றி, உங்கள் பாதத்தை தன் முழங்கால் மீது வைத்து, அதில் படிந்திருக்கும் எல்லா அழுக்கையும், புழுதியையும், சாணத்தையும் மற்றும் உங்கள் உடலின் அழுக்கையும் அவன் கழுவுவான். பின்பு அவன் வேறொரு சீலையை எடுத்து உங்கள் பாதத்தை துடைத்து, மேலும் அவைகளை கழுவி கீழே வைப்பான். அதன் பின் அவன் உங்கள் பாதரட்சைகளை எடுத்து, ஒரு சிறிய சிறிய மேலங்கி போன்ற துணியில் சுற்றி, நுழைவாயிலண்டயிலே மற்றவைகளோடு இவ்விதமாக வைப்பான். அதன் பிறகு அவன் சென்று ஒரு ஜோடு பளபளப்பான பட்டு காலணிகளை கொண்டு வருவான், அவை மிருதுவானவைகள். அது விருந்தளிப்பவரின் அன்பளிப்பு. அவன் அதை செய்கிறான்; அவன் அவைகளை அங்கே வைத்திருப்பான்; உங்களுக்கு சரியாக பொறுத்தும் வரை அவன் ஒவ்வொன்றாக உங்கள் பாதத்தில் மாற்றி மாற்றி மாட்டிக் கொண்டே இருப்பான். 39. அப்பொழுது உங்கள் பாதம் கழுவப்பட்டதாயிருக்கிறது. அதன் பிறகு அவன் உங்களை வேறொரு இடத்திற்கு அனுப்பி வைப்பான், அப்பொழுது அங்கே ஒரு மனிதன் உங்களை வாசலண்டையிலே சந்திப்பான். அவன் தன் கையிலே ஒரு சிறு பாத்திரம் வைத்திருப்பான், சிறிய குப்பி போன்ற ஒன்று அதனை நீங்கள் எடுத்து அதில் கொஞ்சம் தைலத்தை உங்கள் கைகளில் போட்டுக் கொள்ளவேண்டும். இப்பொழுது, அந்த தைலமானது மிகவும் சிறந்த நளதத்தினால் செய்யப்பட்டது. அது என்ன என்றால், அது ஒரு - அது அரேபியாவில் வளரக்கூடிய ஒரு புதரிலிருந்து எடுக்கப்படுகிறது. ஒரு சிறிய பூ ரோஜாவை போன்று மலரும். பின்பு அந்த ரோஜா கீழே விழும் போது, அது அங்கே ஒரு சிறிய பூண்டு போன்ற ஒன்றை விட்டு வைக்கிறது, மேலும் அது ஒரு சிறிய ஆப்பிளை போன்று கடினமாகிறது. அந்த காரியத்தை தான் இந்த மரம் செய்கிறது, ஆனால் நீங்கள் அதை எடுத்து உங்களுடைய கைகளில் உருட்டலாம். நான் ஒரு முறை ஒரு ரஷிய பிரபலத்தை பார்த்தேன், அது போன்று இரண்டை அவன் வைத்திருந்தான்; அப்படியாக நீங்கள் அதை உங்கள் கைகளில் உருட்டும் போது அந்த நறுமணமானது உங்களுடைய கைகளில் இரண்டு வாரங்கள் வரை நீடித்திருக்கும். அது மிகவும் விலை உயர்ந்தது, அதிக விலை கொண்டது. அதை வாங்க அதிக பணம் தேவை. எண்ணெயானது பழையதாகி -- சில நாட்களில் நாற்றமெடுக்க ஆரம்பித்து விடும். ஆனால் அவர்கள் இந்த நளதத்தை அதிலே போட்டு வைப்பார்கள் அது ஆகும் வரை... ஓ, அது அந்த நறுமணத்தை பல ஆண்டுகளுக்கு காத்துக் கொள்ளும். தென் தேசத்து இராஜஸ்திரீ சாலமோனுக்கு கொண்டு வந்த சில பொக்கிஷங்களில் அதுவும் ஒன்றாகும். 40. அதை அவர்கள் உங்களுக்கு தருவார்கள், அதை கொண்டு நீங்கள் உங்கள் கைகளை கழுவ வேண்டும். பின்பு அவர்கள் ஒரு சீலையை உங்களுக்கு தருவார்கள், நீங்கள் உங்கள் கைகளை துடைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அவர்கள் உங்களுக்கு தருவது என்ன என்றால், அதே தைலத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக தருவார்கள். அதை நீங்கள் உங்கள் கழுத்திலும், கழுத்தின் பின்பகுதியிலும், உங்கள் கன்னங்களிலும் மற்றும் உங்கள் நெற்றியிலும் அப்பிக் கொள்ள வேண்டும். பாலஸ்தீனாவில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே இதனை செய்ய வேண்டும், ஏனெனில் சூரிய கதிர்கள் அதிக வெப்பமாயிருக்கும். அவர்கள் அதை செய்யும் போது அது நறுமணத்தை வீசும். பின்பு அதில் பெரும்பாலானவற்றை நீங்கள் துடைத்த பிறகு, நீங்கள் புத்துணர்ச்சியாய் இருப்பீர்கள். உங்கள் பாதம் கழுவப்பட்டாயிற்று: நீங்கள் கழுவப்பட்டு விட்டீர்கள்; உங்கள் கைகள் சுத்தமாய் இருக்கிறது. உங்கள் முகமும் சுத்தமாயிருக்கிறது. இவைகளுக்கு பின்பு நீங்கள் விருந்தளிப்பவனின் அறைக்கு அழைத்து செல்லபடுவீர்கள். அதன்பின் நீங்கள் அவனை சந்திக்கும் போது, நீங்கள் எடுத்து - அவன் தன்னுடைய வலது கையை தூக்கி உங்கள் இடது தோளின் மீது வைப்பான், அப்பொழுது நீங்கள் வணங்க வேண்டும். பின்பு விருந்தளிப்பவன்--நீங்கள் உங்கள் வலது கையை தூக்கி அவனின் இடது தோளின் மீது வைக்கும் போது, அவன் உங்களை வணங்குவான். பின்பு விருந்தளிப்பவன் உங்கள் இருபக்க கன்னங்களிலும் முத்தமிடுவான்; ஆகவே அது தான் வரவேற்பாயிருக்கிறது, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு வலது கை கொடுக்கும் அடையாளம். விருந்தளிப்பவன் உங்களை முத்தமிடும் போது நீங்கள் ஒரு சகோதரராயிருக்கிறீர்கள்; நீங்கள் வரவேற்கப் படுகிறீர்கள். இயேசு டாக்டர் ஜோன்ஸின் பாதத்தை கழுவ மிக கவனமாயிருந்தார் இல்லை மாறாக பரிசேயன் டாக்டர் ஜோன்ஸின் பாதத்தை கழுவ மிக கவனமாயிருந்தான். அவன் மற்ற பிரபலங்களை குறித்து மிகவும் கவனமாயிருந்தான், ஆனால் இதோ இங்கே இயேசு அழுக்கான பாதங்களுடன் அமர்ந்திருக்கிறார். இதோ இயேசு வரவேற்கப்படாதவராய் அமர்ந்து இருக்கிறார். அவருக்கென எண்ணெய் எதுவும் இல்லாமல். இதோ இயேசு இங்கே முத்தமில்லாமல் அமர்ந்திருக்கிறார். இதற்காகத் தான் அவர் தன்னுடைய பணியை விட்டு விட்டு பாலஸ்தீனத்தை கடந்து வந்தார், தன்னுடைய வாக்குறுதியை காத்துக்கொள்வதற்கு. 41. அவர் அங்கே பரிதபிக்கப்படத்தக்கவராய் அமர்ந்திருந்தார் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். மற்றவர் அனைவரிடமும், அங்கே அந்த பரிசேயன் நடந்து முடிந்த வெவ்வேறு காரியங்களை பற்றி சாட்சியளித்து கொண்டிருந்தான், ஆனால் பரிதாபமான இயேசுவோ அங்கே அழுக்கான பாதங்களுடனும், அபிஷேகிக்கபடாத முகத்துடனும், முத்தம் பெறாதவராய் அமர்ந்திருந்தார். இயேசு முத்தமிடப்பட விரும்புகிறார். சங்கீதம் 2-ல் ஒரு வசனம் இருக்கிறது, கூறுகிறது. "குமாரன் கோபம்கொள்ளாமல் இருக்கும்படிக்கு அவரை முத்தஞ்செய்யுங்கள்." "குமாரனை முத்தஞ்செய்யுங்கள்," ஓ. குமாரனை நீங்கள் ஒரு முறையாவது முத்தமிடும் வரை அது எதை பற்றி உணர்த்துகிறது என்பதை உங்களால் ஒரு போதும் அறிந்து கொள்ள முடியாது. குமாரனை முத்தமிடுங்கள், உங்களுடைய இருதயத்திற்குள் வரும்படிக்கு அவரை அழையுங்கள். ஆனால் அவர் அங்கே அபிஷேகிக்கப்படாமல் அழுக்கான பாதங்களுடன் அமர்ந்திருந்தார். ஓ. அது அவருக்கு எவ்வளவு சங்கட்டமாய் இருந்திருக்கும். பரிசேயன் தன்னுடைய சிறப்பான தருணத்தை கொண்டிருந்தான்; பட்டணத்தின் சிறந்த மனிதர்களை மகிழ்விப்பதில் அவன் மிகவும் மும்மரமாயிருந்தான். ஆகவே இயேசு கவனிக்கப்படாததை அவன் அறியவில்லை. ஆனால் எப்படியிருந்தாலும் அவர் வந்துவிட்டார். ஓ, என் தேவனே, எப்படி என்ன நடந்தது, அந்த வாசலண்டையிலே நின்ற அந்த பாதம் கழுவும் வேலைக்காரன் எப்படி அவருடைய பாதங்களை கழுவாமல் நழுவ விட்டான்-? தேவனே, அவனுடைய வேலை எனக்கிருந்திருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அவருடைய பாதங்களை வாசலண்டையில் கழுவுவதை நான் எவ்வளவாய் நேசித்து செய்திருப்பேன். அவர் அங்கே அமர்ந்திருக்கிறார் என்பதை நான் அறிந்த மாத்திரத்தில், என்னுடைய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அவரை கவனித்துக் கொள்வதை நான் எவ்வளவாய் நேசித்திருப்பேன். 42. ஆனால் அவர் அங்கே ஐசுவரியவான்களோடும் பெருமைக்காரர்களோடும் இருந்தார். அவரை குறித்து அவர்கள் துளிகூட செட்டை பண்ணிக் கொள்ளவே இல்லை. அவர் சற்றே ஒரு வேடிக்கைப் பொருளாய் இருந்தார், ஜனங்கள் வாயை பிளந்து பார்க்கும்படிக்கான ஏதோ ஓன்றாயிருந்தார். தனக்காகவோ அல்லது ஏதோவொன்றிற்காகவோ ஒரு அற்புதத்தை செய்ய வேண்டுமென அவரிடம் கேட்கபோவதைப் பற்றி அவன் தன்னுடைய இருதயத்தில் எண்ணம் கொண்டிருந்தான். கொண்டிருந்தான் என்பதில் எந்த விதமான சந்தேகமுமில்லை. அவர் அங்கே அமர்ந்திருக்கையில், வெளியே தெருவில், பட்டணத்திலே ஒரு மிக மோசமான ஸ்திரி அதாவது ஒரு விபச்சாரி இருந்தாள். அதை குறித்து நாம் மிக விரிவாக பேசப் போவதில்லை; அப்படியென்றால் என்னவென்று உங்களுக்கே தெரியும்; விழுந்து போன, கெட்ட பெயர் கொண்ட ஒரு ஸ்திரி. அவளை குற்றப்படுத்த வேண்டாம். கவனியுங்கள், ஒரு பெண் விழுந்து போவதற்கு முன்பு அங்கு ஒரு ஆணும் விழுந்து போயிருக்க வேண்டும். ஒரு வேளை அவளுக்கு ஒரு அன்பானவன் இருந்திருப்பான் தன்னுடைய மனதார அவனை நேசித்திருக்கலாம், அவளின் ஜீவிய மலரை அவன் தன் காலின் கீழ் நசுக்கி இது போன்ற ஒரு ஜீவியத்திற்கு அவளை அறிமுகம் செய்திருக்கலாம். வேதாகமம் கூறியது அவள் ஒரு மிக மோசமான பாவியென்று. யாருக்கும் அவளிடம் செய்ய ஒன்றுமே இல்லை, ஆனால் எல்லாருமே அவளை அறிந்திருந்தனர். நிச்சயமாக. அவள் யார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவள் ஒரு மோசமான பாவியாயிருந்தாள். அநேகமாய் நடந்து செல்லும் போது, எந்த ஜனங்களாலும் வரவேற்கப்படாத நிலையில், அவள் நுனி-கால் விரல்களில் நின்று மேலே எக்கி பார்த்தால், அப்பொழுது தன்னுடைய கர்த்தர் ஒரு மூலையில் கழுவப்படாத பாதங்களுடன் அமர்ந்திருப்பதை, ஐசுவரியவான்களின் மத்தியில் வரவேற்கப் படாதவராய் அமர்ந்திருப்பதை அவள் அடையாளம் கண்டு கொண்டாள். அது அவளுக்கு மிகவும் அதிகமாயிருந்தது. அவள் கூறினால், "இல்லை, அது அவர் தான் என்று எனக்கு நிச்சயமாக தெரியும்." 43. உங்களால் ஒருபோதும் இயேசுவை காண முடியாது அது வரை... நீங்கள் அவரை மறுபடியும் பார்க்கும் போது அவரை அடையாளம் கண்டு கொள்வீர்கள். அவரை நோக்கிப் பார்த்த யாரும் ஒரு போதும் அவருடைய தோற்றத்தை எப்பொழுதுமே மறக்க முடியாது. அவள் கூறியதை என்னால் சிந்திக்க முடிகிறது எங்கோ வேறிடத்தில் அவரை பற்றி அவள் கேள்விப்பட்டு இருக்கக்கூடும், அவள் கூறினாள், "ஓ, அந்த மகத்தான போதகர் அங்கே இருக்கிறார். ஆனால் அவரோ இங்கே இந்த பரிசேயர்களுடன் இருக்கிறார், அவர்களுக்கோ அவர் தேவையில்லை". ஓ. அவள் திரும்பி கொண்டாள்; அவள் கூறுவதை என்னால் காண முடிகிறது, “ஓ, என்னால் -- என்னால் முடியாது. ஓ அது, எனக்கு பைத்தியம் பிடிப்பது போலிருக்கிறது. நிச்சயமாக- நிச்சயமாக என்னால் அதை செய்யவே முடியாது. ஓ ஓ, ஒருவேளை, என்னால் முடியுமென்று எண்ணுகிறேன்-?" அவள் தன்னுடைய ஆடைகளை தன்னை சுற்றி ஒன்று சேர்த்துக் கொண்டு தெருவில் நடக்க ஆரம்பித்ததை என்னால் காண முடிகிறது. இரண்டு மனிதர்கள் தங்கள் கரங்களை ஒன்றாக தட்டி கொண்டு, "அங்கே கவனி, எது வருகிறதென்று பார்" என்று சொல்வதை என்னால் காண முடிகிறது. ஒ, நிச்சயமாகவே நீங்கள் மிகவும் நல்லவர்கள் தான். நான் நேராக உங்கள் கண்களை ஒரு முறை பார்த்து. நீங்கள் எவ்வளவு நல்லவர் என்பதை காணட்டும்." 44. நீங்கள் கூறலாம். "சகோதரன் பிரன்ஹாமே. நான் விபச்சாரியல்லவென்று." நான் முழுமையாக மாம்ச இச்சைகளை மட்டுமே குறிப்பிடவில்லை. விபச்சாரம் உயர்ந்த மட்டத்தில் உள்ளது. உங்கள் நேரத்தில் நீங்கள் விபச்சாரம் செய்ய முடியும். அவருக்காக நீங்கள் எவ்வளவு நேரம் கொடுக்கிறீர்கள்-? உங்களுடைய சுயநலமான நோக்கங்களுடன் விபச்சாரம் செய்து விட்டு, "நல்லது, நான் இந்த சபையை சார்ந்தவன், நான் நன்றாய் இருக்கிறேன்." என்று கூறி சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இல்லை நீ நன்றாக இல்லை. மாம்ச இச்சை அல்லாமல் வேறு வழியிலும் உங்களால் விபச்சாரம் செய்ய முடியும். பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய இருதயத்துடன் பேசுவார், ஆனால் நீங்கள் கூறுவீர்கள், "அதை குறித்து நான் எதையுமே செய்ய விரும்பவில்லை" என்று. நீ, குருட்டு பரிசேயனே, வேசி. உன்னிடம் என்ன காரியமிருக்கிறது-? உலகத்துடன் விபச்சாரம் செய்து கொண்டிருக்கிறாய், அதை தான் நீ செய்து கொண்டிருக்கிறாய். ஓ, நீங்கள் கூறலாம், "நான் சபையை சார்ந்தவன்" என்று, மிகவும் குளிர்ந்ததாய் மற்றும் அலட்சியமாய். ஓ, நீங்கள் நன்றாக ஜெபத்தை ஏறெடுக்கிறீர்கள். ஓ, நான் அந்த பரிசேயக் காரியங்களை வெறுக்கிறேன். ஓ, உங்கள் ஜெபத்தில் ஒவ்வொரு காற்புள்ளியையும் ஒவ்வொரு முற்றுப்புள்ளியையும் துல்லியமாக ஏற்ற இறக்கங்களுடன் நிறைவு செய்கிறீர்கள். ஓ, நீங்கள் மிகவும் அழகாக ஜெபிக்கிறீர்கள். அந்த விதமாக நீங்கள் தேவனுடன் பேச முடியாது. நீங்கள் என்ன கூறுகிறீர்களோ அதை நீங்கள் கவனித்துக் கொண்டு, அதை நிறுத்தற்குறிகளுடன் ஏறெடுக்கிறீர்கள். தேவன், உங்களுக்கு ஒரு முறை எதை பற்றியும் சிந்திக்காமல் ஜெபிக்க உதவி செய்வாராக. ஜெபத்தை ஒப்பிப்பதை நிறுத்துங்கள். 45. ஓ, பரிசேயர்களே, உங்களில் பலர், பரிசேயர்களாய் இருக்கிறீர்கள். ஓ. நீங்கள் கூறலாம், "நான் சபையை சார்ந்தவனென்று." அது எல்லாம் சரி தான்; நிச்சயமாகவே நீ சபையை சார்ந்தவன் தான். ஆனால் என்னுடைய கர்த்தரிடம் நீ எந்த மனநோக்கத்துடன் அணுகுகிறாய்-? அவர் உன்னிடம் வந்து உன்னை ஆசீர்வதிக்க வேண்டுமென்று விரும்பும் போது, நீ அதை செய்வதில்லை. "ஓ, இல்லை, நான் அது போன்ற காரியங்களை விசுவாசிப்பதில்லை. அந்த அதே கூட்டத்தைப் பற்றித்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன், மிகவும் பக்திமான்கள், ஆனால் மிகவும் பரிசேயர்கள். நான் என்ன கூறினேன் அவர்கள் தொடக்கத்திலேயே நடிகர்களாய் இருக்கின்றனர். மார்க்கத்தானை போன்று நடிப்பதை நிறுத்துங்கள். மறுபடியும் பிறந்து, பழைய பாணியிலான மறுபிறப்பின் அனுபவத்தை பெறுங்கள். என்னுடைய கர்த்தர், அவர் உன்னை காண ஏங்குகிறார். ஒரு மூலையில் அமர்ந்து, உனக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் ஒரு போதும் உன்னை கடிந்து கொள்ளமாட்டார்; அவர் உன்னை நேசிக்கிறார். மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை நீ சபைக்கு சென்று விட்டு, உன்னுடைய கடமை முடிந்து விட்டது என்று கருதுகிறாய். ஓ. நீ அவரை நேசித்து மட்டும் இருப்பாயானால், ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு பகலும் நீ எங்கேயாவது ஓரிடத்திற்கு சென்று அவருடன் பேசி இருப்பாய், அவரை நீ நேசித்திருந்தால். ஆனால் அதை பற்றின பிரச்சனை என்னவென்றால், நீ சபைக்கேற்றார் போல் நடிக்கிறாய், பக்திமானாய் நடிக்கிறாய். என்னே ஒரு பரிதாபம், நாம் அதை இன்னமும் கொண்டிருப்பதால் அது மோசமாயிருக்கிறது. 46. இந்த சிறிய ஏழை பெண், என்னால் அவளை காண முடிகிறது, பெயர் கெட்டவள், தெருக்களின் வழியே அவள் சென்று, தான் வசித்து வந்த மேல் மாடியில் இருக்கும் ஒரு சிறு அறைக்கு செல்ல க்ரிக் க்ரிக் என சத்தம் கேட்கும் படியில் ஏறினாள், அவளுடைய இருதயம் குதித்தப்படியே இருந்தது; அந்த காட்சியை அவளால் தன் மனதிலிருந்து அகற்றி போடவே முடியவில்லை. ஓ தேவனே, யாரேனும் எப்பொழுதாவது அவரை அவருடைய எளிமையான வார்த்தையில் காணும் போது மற்றும் அவருடைய அன்பை காணும் போது, அது ஒருபோதுமே உங்களை விட்டுப் போகாது. ஏதோவொன்று உங்களின் நினைவை எப்பொழுதும் தைத்து கொண்டே இருக்கும். அவள் அவரை காண்கிறாள்; அவள் மேல் மாடிக்கு சென்று அவள் தன்னுடைய சிறிய சேமிப்பு பெட்டியை திறந்து, அதிலிருந்து சிறிய ஏதோ ஓன்றை ஒரு சிறிய பையை வெளியே எடுத்தாள். அவள் அதை வெளியே கொண்டு வந்து, அதை வைத்தாள், நாணயங்கள் கிளிங் கிளிங் என்று மேஜையில் விழுந்தது. அந்த நாணயங்கள் விழுந்த போது, அவள் அதை மறுபடியும் எடுத்து வைத்தாள்; அவள் அந்த முகத்தை தனக்கு முன்பாக கண்டாள். கண்ணீர் அவளின் கன்னங்களில் வடிந்து, அவளின் தாடையிலிருந்து சொட்டு சொட்டாக கீழே விழுந்தது. "என்னால் அதை செய்ய முடியாது; என்னால் முடியாது. ஏனெனில் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை அவர் அறிவார். நான் அந்த பணத்தை எவ்வாறு சம்பாதித்தேன் என்பதை அவர் அறிவார். என்னால் அதை செய்ய முடியாது" என்றுகூறினாள். அநேகமாக அவள் அந்த பண பையை திரும்பவும் வைத்து விட்டாள்; பின்பு அவள் மறுபடியும் சென்று அதை எடுத்தாள். அவள் கூறினாள், "என்னால் முடியாது, எனக்கு என்ன ஆனது-? ஆனால் தேசத்தின் மறுமுனையிலிருந்து வந்திருந்தும் அவர் கவனிக்கப்படாமலிருப்பதை நான் காண்கிறேன். அதை குறித்து நான் என்ன செய்ய முடியும்-? என்னிடம் இருப்பது எல்லாமே இவ்வளவு தான், நிச்சயமாக அவர் புரிந்து கொள்வார். நிச்சயமாக அவர் புரிந்து கொள்வார், நிச்சயமாக அவர் புரிந்து கொள்வார். என்னிடம் இருப்பது எல்லாமே இவ்வளவு தான்; நிச்சயமாகவே அவர் அதை புரிந்து கொள்வார்." 47. அவள் பதட்டத்துடன் இருப்பதை என்னால் காண முடிகிறது, அதை தன் கையில் எடுத்துக் கொண்டு, அதை தன் மார்போடு அணைத்து, அநேகமாக அவளின் ஆடையில், உள்ளே அதை சுற்றி வைத்து, தன்னுடைய ஆடையால் தன்னை சுற்றி, வெளியே தெருவில் சென்றாள். நேரம் ஆகிக் கொண்டிருந்தது, அவள் தெருவின் வழியாக ஒரு சிறந்த, நல்ல வாசனை திரவியம் செய்யும் கடைக்கு சென்றாள். அவள் உள்ளே சென்றபோது, அங்கே ஒரு வயதான கிளி மூக்கு கொண்ட, முணுமுணுக்கும் ஆள் பணம் எண்ணும் மேஜைக்கு பின் நின்று, தன்னுடைய பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான். "நல்லது, இன்றைய நாள் ஒரு நல்ல நாளாக இல்லை. வாடகை கொடுக்க கூட லாபம் வரவில்லை. மோசமான நாள்." விரக்தியடைந்தவனாய், இருந்த போதும் தன்னுடைய மதத்தில் தன்னால் இயன்ற வரை பற்று கொண்டவனாய் இருந்தான். அவள் வாசலுக்கு வந்தாள். அவள் வாசலண்டை வந்த போது, அவன் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது, "ஹஹ், இப்போது பார்." ஓ. அவள் நன்றாக அறியப்பட்டவளாயிருந்தாள். எல்லோருமே அவளை அறிந்திருந்தனர், நிச்சயமாக எல்லோருமே இந்த பெண்ணை அறிந்திருந்தனர் அவன், வாசலுக்குள் நடந்தாள். நல்லது அவன் அவனிடம் தன்மையாக நடக்க வேண்டிய விதமாக நடக்கவில்லை மேலும் "நீ எப்படி இருக்கிறாய்-? உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்" என்றும் கூறவில்லை. அவன் கூறினான் "நல்லது என்ன இது“ என்றான். அவன் பணத்தை பணம் என்னும் மேஜையின் மீது வைத்தாள். ஓ அந்த நாணயத்தின் இளிங் கிளிங் சத்தம் நிச்சயமாக அது காரியங்களை மாற்றி போட்டது. "ஒரு வேளை நாங்கள் யோசேபபை அந்த-அந்த கல்லறையில் விட்டு விட்டால் எங்களுக்கு என்ன லாபம்" என்று சொல்லும் குழுவை சார்ந்தவனாய் அவன் இருந்தான். அதில் என்ன லாபம்-? ஓ. ஆம். அதைத் தான் ஜனங்கள் இன்றும் சிந்திக்கின்றனர். அதிலிருந்து நீங்கள் என்ன ஈட்ட முடியும்-? அதில் எவ்வளவு பணம் இருக்கிறது-? குருட்டு பரிசேயனே. இயேசு இங்கே இருக்கிறார். அவர் கவனிக்கப்பட விரும்புகிறார். நீ அவரை அழைத்திருக்கிறாய். 48. அங்கே பணத்தை கிடத்திவிட்டு, அவன் கூறினான் -- அவள் கூறினாள், "எனக்கு இந்த கடையில் இருப்பதிலேயே மிகவும் சிறந்ததான பரிமளத்தைல வெள்ளைக்கல் பரணி வேண்டும் என்றாள். ஏன், அவன் கூறினான், "உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறதென்று நாம் பார்க்கலாம்." அவள் பணத்தை கிடத்தினாள், அவளிடம் 180 ரோம தினார்கள் இருந்தது. அவன் அதை எல்லாவற்றையும் எண்ணினான், "ஆம், உன்னிடம் போதுமானது இருக்கிறது." என்ன-? அவள் சிறந்த ஒன்றை விரும்பினாள். அவள் கூறினாள், "அவர் சிறந்த ஒன்றை பெற்றுக்கொள்ள பாத்திரராயிருக்கிறார்." ஆம் அவர் பாத்திரராயிருக்கிறார். உன்னிடம் இருப்பதிலேயே சிறந்த ஒன்றை பெற்றுக் கொள்ள அவர் பாத்திரராயிருக்கிறார். அவருக்கு ஒரு சிறிய மூலையை ஒதுக்காதே: உன்னிடம் இருக்கும் எல்லாவற்றையுமே அவருக்கு கொடுத்து விடு. உன்னிடம் இருக்கும் சிறந்த ஒன்றை பெற்றுக் கொள்ள அவர் பாத்திரராயிருக்கிறார் மேலும் உன்னால் செய்ய முடிந்த சிறப்பானதிற்கு அவர் பாத்திரராயிருக்கிறார். அவளிடம் இருந்த மொத்தமும் அவ்வளவு தான். தான் அதை எப்படி சம்பாதித்தாள் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவள் கூறினாள், "இந்த வழியில் அதை செய்வதை நான் வெறுக்கிறேன். ஒரு வேளை நான் ஒழுக்கமின்றி இருக்கலாம், ஆனால் என்னிடம் இருக்கும் சிறந்த ஒன்று இது தான்." அவள் அவனிடம் விலையை குறித்து பேரம் பேசவில்லை; அது அதோடு முடியவில்லை. அவள் சிறந்தவொன்று தான் வேண்டுமென்றாள். உங்களால் அதை காண முடிகிறதா-? அவள் சிறந்தவொன்று தான் வேண்டுமென்றாள். அவள் கூறினாள், "அது சிறந்த ஒருவருக்காக செல்கிறது, எனவே ஏன் அவர் சிறந்தவொன்றை பெற்றிருக்கக் கூடாது-?" என்றாள். 49. அவள் அந்த பரிமளத்தைல வெள்ளைக்கல் பரணியை எடுத்து, தன் மார்போடு அணைத்துக் கொண்டு, உடனே கிளம்பினாள். அங்கே அந்த கிளி மூக்கு கொண்ட அந்த வயதான யூதன் அங்கே பார்த்ததை என்னால் காணமுடிகிறது. வேறே இரண்டு மனிதர்கள் அவளின் மேல் தட்டி -- ஒருவொருக்கொருவர் கைகளை தட்டி கூறினார்கள், "அங்கே செல்வதை பார், அங்கே கடையிலிருந்து வெளியே வருவது என்னவென்று பார். அவள் அங்கே என்ன செய்தாள் என்று நான் வியக்கிறேன்" என்றார்கள். ஓ, நீ, பரிசேயனே, மற்ற வேறு யாரோ ஒருவரை தீண்டுகிறாய். உன்னை நீயே ஒரு தரம் பார். ஓ. உன்னுடைய செயல்களில் மாம்ச இச்சைப்படி நீ செய்யாதவனாய் இருக்கலாம்; ஒரு வேளை நீ மது அருந்தாதவனாய் இருக்கலாம்; ஆனால் ஓ, நீ, குருட்டு பரிசேயனே, என்னுடைய கர்த்தருக்கு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்-? அவருக்கு நீ என்ன செய்தாய், நெஞ்சில் ஈரமில்லாத மாய்மாலக்காரனே நீ-? அவரை நீ கீழே போட்டுவிட்டாய். அதை எதற்காக நீ செய்தாய்-? எப்படி அதை உன்னால் செய்ய முடிந்தது-? அவருடைய பிரசன்னம் உன்னை சுற்றிலும் இருப்பதை காண, அங்கே உன்னை ஆசிர்வதிக்கவும் மேலும் உன்னை கவனிக்கவும் அவர் விரும்புகிறார் என்பதை அறிய, ஆனால் நீயோ மிகவும் நல்லவனாயிருக்கிறாய். ஓ நீ ஒரு போதும் நிர்பாக்கியமுள்ளவன் ஆனதில்லை.. தேவனுடைய பார்க்கும் கண்ணாடியில் உன்னை நீயே ஒரு முறை பார்த்து நீ எப்படி இருக்கிறாய் என்பதை கண்டுக் கொள். உன்னுடைய சுயநீதியும், உன்னுடைய எல்லா வடிவங்களும் மற்றும் மிகச்சிறிய காரியங்களும் காணாமல் போய் விடும். உன்னுடைய பாரம்பரியங்களும் கூட 50. என்னால் அவளை காண முடிகிறது; அவள் துரிதமாய் செல்ல வேண்டியிருந்தது; கால தாமதம் ஆகிக்கொண்டிருந்தது. ஒன்றை செய்யாமலே இருப்பதற்கு, கால தாமதமானாலும் அதை செய்வதே நலம். அவள் அங்கே சென்ற போது அவள் ஜனக்கூடத்தின் அருகில் இருந்த போது, ஐசுவரியவான்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அவளால் கூற முடியும். மது கோப்பைகள் ஒன்றோடொன்று உரசி சத்தம் எழுப்புவதை அவளால் கேட்க முடித்தது. உங்களுக்கு தெரியுமா, அது போன்று அவர்கள் எங்கே இருந்தனரோ அங்கே அவள் சென்றாள். அவர் எங்கே இருக்கிறார் என்று அவள் வியந்தாள். அவள் முழுவதுமாக பரபரப்பாயிருந்தால் அந்த யூதன், தன் தலையை சொரிந்துகொண்டு, மூலையில் இருந்த நபர்களை பார்த்தான். அவர்கள் கூறினார்கள், "அவளுக்கு என்ன ஆயிற்று-?" கூறினார்கள், "அவளின் கன்னங்களினூடாக கண்ணீரின் தடம் இருக்கிறது. அவள் அழுது இருக்க வேண்டும். இப்பொழுது அவள் எங்கே சென்று கொண்டிருக்கிறாள் என்று நான் வியக்கிறேன். என்ன நடந்திருக்கும் என்று நான் வியக்கிறேன்" அந்த பெண், அவருடைய முகத்தை பார்த்து அவள் கூறினாள், "இந்த பரிசேயர்களை போல் அவர் பேசமாட்டார்; அவர் தனித்துவம் வாய்ந்தவர். அந்த போதகர் இந்த பரிசேயர்களை விட சிறிது வேறுப்பட்டவர்." ஏதோவொன்று வித்தியாசமாக இருந்ததை அவள் அறிந்திருந்தாள். அவள் மேல் நோக்கி பார்த்த போது அவள் சிந்தித்தாள், "நான் எப்படி அங்கே செல்ல போகிறேன், அந்த ஐசுவரியவான்கள் இருக்கும் இடத்திற்குள். என்னால் அதை எப்படி செய்ய முடியும். ஆனால் அவள் செய்த காரியம், அவள் கூறினாள், "ஒரு நாள் அவர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன், 'வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்''' என்று. 51. அந்த காரியம் என்னவெனில், அவள் எப்படி அங்கே செல்லப் போகிறாள் என்பதில் அல்ல, அங்கே செல்வதற்கு அவள் முயற்சி செய்யப் போகிறாளா-? என்பதிலிருக்கிறது. அவள் தன் முழங்கையால் கூட்டத்தை தள்ளிகொண்டு முன்னேறி செல்வதை என்னால் காண முடிகிறது. என்ன கூறப்பட்டது அல்லது யார் கூறினார் என்பதை பற்றி கவலையில்லை, இயேசுவை சந்திக்க தன் பாதையிலே அவள் சென்றாள். நீங்கள் அதை செய்கின்றீர்களா-? இன்றைக்கு உலகத்திலிருக்கும் மாறுபாடானவைகளை உங்கள் முழங்கையால் தள்ளி கொண்டு நீங்கள் முன்னேறி செல்வீர்களா-? உங்களை நீங்களே கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொண்டு, நீங்கள் செய்து கொண்டிருப்பவைகளில் இருந்து, கொச்சையானவைகளை, சினிமா படங்களை மற்றும் நடனங்களை உங்கள் முழங்கையால் தள்ளி விட்டு இயேசுவிடம் முன்னேறிச் செல்வீர்களா-? கர்த்தராகிய இயேசுவினிடத்தில் வந்து அவரால் கவனிக்கப்படுவதெற்கென, உங்களுடைய எல்லா உலகப்பி ரகாரமான சமுதாய பொழுது போக்குகளையும் தயவு செய்து நீங்கள் கீழே போடுங்கள். தேவனே இரக்கமாயிரும். அவள் சரியாக அதினூடாக தன் முழங்கையால் தள்ளிக் கொண்டு முன்னேறி சென்றாள். அவள் அங்கே சென்றடைய போகிறாள், அவள் எவ்வளவு அற்பமாக எண்ணப்பட்டாலும் பொருட்டல்ல, ஓ, அது ஒழுங்கை மீறியதாக இருந்தது என்பதை நானறிவேன். ஓ நிச்சயமாக. தேவனே எப்பொழுதாவது ஒரு முறை நாங்கள் ஒழுங்கை மீற எங்களுக்கு உதவி செய்யும். அதை குறித்த பிரச்சனை என்னவெனில், நீங்கள் மிகவும் அதிகமாக ஒழுங்கை பெற்றிருக்கிறீர்கள். ஒழுங்கியிலிருந்து வெளியே வாருங்கள். சபையானது இரட்சிக்கப்படும்படிக்கு போதுமான அளவு ஒழுங்கியிலிருந்து வெளியே வருமென நான் நம்புகிறேன். 52. இயேசு என்னை எப்பொழுது இரட்சித்தார் என்பது என் நினைவிலிருக்கிறது. ஓ. என்னால் அதை ஒரு போதுமே மறக்க முடியாது, என்னுடைய இந்த சிறிய கென்டக்கி இருதயமானது மணிக்கு 90 மைல் வேகத்தில் குதித்துக் கொண்டிருந்தது. நான் தேம்பினேன்; நான் அழுதேன்; நான் கூச்சலிட்டேன். என் பக்கத்தில் யார் நின்றிருந்தார்கள் என்பதை பற்றி நான் கவலை கொள்ளவே இல்லை. நான் ஒழுங்கியிலிருந்து ஒழுங்கிற்கு என்னுடைய கவனத்தை செலுத்தவே இல்லை; நான் இயேசுவின் பிரசனத்திலிருந்தேன்; நான் அவரை நேசித்தேன். ஒழுங்கில் இருக்கிறாள் அல்லது எவ்வளவாக ஒழுங்கில் இல்லாமல் இருக்கிறாள் என்பதை பற்றி அவள் கவனிக்கவே இல்லை. இயேசுவிடம் செல்ல வேண்டும், அதுவே பிரதான காரியமாக இருந்தது. அங்கே அவர் அழுக்கான பாதங்களுடன் அமர்ந்திருந்தார். முத்தம் பெறாமல் அவர் அமர்ந்திருந்தார். அவர், வரவேற்கப்படாமல் இருந்தார். எனவே அவள் அவருக்கு வரவேற்பை அளிக்க விரும்பினாள். அவர்களுடைய பரிசேய ஒழுங்குகளை அதாவது அவர்களுடைய பழைய பாரம்பரியங்களையும் மற்றும் நியமங்களையும் பற்றி அவள் அக்கறை கொள்ளவே இல்லை. இயேசுவினிடம் செல்ல அவள் தன்னுடைய முந்தி தள்ளி சென்று கொண்டிருந்தாள். தேவனே அது ஒரு எழுப்புதலை நாங்கள் பெற்றிருக்க எங்களுக்கு அங்கே ஆண்களும் பெண்களும் தங்களுடைய வழியிலிருக்கும் கூட்டத்தையும், ஸ்தாபனங்களையும் மற்றும் தடைகளையும் தங்கள் முழங்கையால் தள்ளிக் கொண்டு இயேசுவின் பிரசன்னத்திற்குள் செல்லும் வரை முன்னேறட்டும். 53. ஆம், அவள் இயேசுவிடம் செல்ல விரும்பினாள்; அவருக்கு அழுங்கான பாதங்களிருந்தது. என்னுடைய கர்த்தராகிய தேவன் அழுக்கான பாதங்களுடன் அமர்ந்திருந்தார். அந்த பாதங்களில் விரைவாக ரோம ஆணி கடாவப்பட இருக்கிறது. ஏனெனில் அவருடைய இரத்தம் உலகத்தின் இரட்சிப்புக்காக கொடுக்கப்பட வேண்டியிருக்கிறது. அழுக்கான பாதங்கள், அதற்காக அவர் என்னை மன்னிப்பாராக. ஓ. அது என்னை வேதனைப்படுத்துகிறது ஆனால் இயேசு, அழுக்கான பாதங்களுடன், முத்தம் பெறாமல் விரும்பப்படாமல்: "அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ள வில்லை." தன்னுடைய வாக்கை காத்துக் கொள்ளும்படி வந்தார் ஆனால் அப்பொழுதோ கவனிக்கப்படவில்லை. ஜனங்களே நீங்கள் ஏன் வருடா வருடம் எழுப்புதலுக்காக ஜெபிக்கிறீர்கள், அது உங்கள் அருகாமையில் வரும் போதோ நீங்கள் அதை ஒரு மதவெறி என்று நினைத்துக் கொள்ளுகிறீர்கள். கவனிக்கப்படாமல், இயேசு, அழுக்கான பாதங்களுடன். ஓ, ஒவ்வொரு மனிதனுடைய மற்றும் பெண்ணுடைய இருதயத்தை உடைக்க வேண்டுமென்றால்... கவனிக்கபடாதவராய். ஒ, பிரபலங்களும் மற்றும் பெரிய காரியங்களும் சரியாக போய்க் கொண்டிருக்க, ஆனால் இயேசுவோ கவனிக்கப்படாதவராய் இருந்தார். ஒ. என்னே. 54. கவனியுங்கள் அது தொடர்ந்து செல்லும் போது, அவள் துரிதமாக ஓடினாள்; அவள் அவருடைய பாதத்தண்டை சென்றாள், அவர் அங்கே பாதத்தை நீட்டியவாறுபடுத்திருந்தார். அவள் அவருடைய முகத்தை பார்த்தாள்; அவள் கூறினாள், "என்னால் முடியாது, என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நான் நானாகவே இல்லை” என்றாள். அவள் அழுது கொண்டிருந்தாள். தேவனே எப்பொழுதாவது ஒரு முறை நாங்கள் நாங்களாக இல்லாதபடி இருக்க எங்களுக்கு உதவி செய்யும். அதை பற்றின பிரச்சனை என்னவெனில் நீங்கவும் சடங்கு முறைகளை பின்பற்றுகி றவர்களாய் இருக்கிறீர்கள். தங்கள் ஒரு குறிப்பிட்ட விதமாக ஜெபிக்க வேண்டும். அதை ஆமென் என்று சொல்லி முடிக்கவேண்டும். அதாவது ஒரு சுளுக்கு பிடித்த கன்று இறப்பதை போல….-?....ஆ-மனிதனே பாடல் குழுவில் எழுந்து நின்று வர்ணம் பூசப்பட்ட முகத்துடன் பாடுங்கள். மேலும் யேசபேலின் விரல் நகங்களுடன், மேலும் எனக்கு எதுவும் தெரியாது என்று நடியுங்கள், பின்பு உங்களை நீங்களே கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளுங்கள். நீ, குருட்டு பரிசேயனே. உன்னுடைய காரியம் என்ன-? என்னுடைய கர்த்தர் நகரத்திலிருக்கிறார். அவரை உன்னுடைய இருதயத்தில் கவனிக்க மாட்டாயா-? 55. அங்கே, அவர் அங்கே அமர்ந்திருந்தார். அவரின் பாதத்தண்டை சென்றாள், அவள் பரணியை தரையின் வைத்தாள். அவள் எழுந்திருக்க முயற்சித்தாள். அவளால் முடியவில்லை. அவளால் சற்றே முடியவில்லை. அவள் மிகவும் கடினமாக அழுததால் அவளால் எழுந்திருக்க முடியவில்லை. அவள் பாதி குனிந்த நிலையிலிருந்தாள் அவளால் எழுத்திருக்க முடியவில்லை. அவள் அந்த பரிசுத்த நீருற்றின் அருகில் நிற்பதை அவள் உணர்ந்தாள். தன்னை மன்னிக்கக் கூடிய ஒன்றே ஒன்றிற்கு அருகாமையில் நின்று கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். இம்மானுவேலின் இரத்தத்தினால் நிறைந்த ஓர் ஊற்றுண்டு" அந்த ஒன்று மட்டுமே அவளின் குற்ற உணர்ச்சியை கழுவ முடியும். ஒரு விபச்சாரியாக அவள் அந்த பிரசன்னத்திற்குள் இருந்தாள் அவள் இருந்த வண்ணமாகவே அவள் வந்தாள். என்ன செய்வதென்று அவளுக்கு தெரியவில்லை. அவள் கதறி அழுதாள், அவள் தன்னுடைய கரங்களை உயர்த்தியிருந்தாள். அவளால் அதில் நிற்க முடியவில்லை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். மேலும் அவர் அங்கே தான் இருந்தார். “ஓ, அது சாத்தியமா” அவள் கூறினாள். "அது சாத்தியமா, அது அவரே தான், அன்பான ஒருவர்-? வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்-? என்று நான் கேட்ட ஒருவர். தேவனே என்னுடைய இருதயத்தை நீர் அறிவீர்; நான் ஒரு வார்த்தையும் பேச வேண்டியதில்லை; என்னால் முடியாது. நான் நானாகவே இல்லை." 56. மேலும் அவள் முயற்சித்தாள், அவள் தேம்பி தேம்பி அழும் போது, அந்த கண்ணீர் அவளின் கன்னங்களிலிருந்து வடிந்து, இயேசுவின் அழுக்கான பாதங்களின் மீது விழுந்தது. அவள் கன்னங்களிலிருந்து தாரை தாரையாக ஊற்றும் கண்ணீர் அவரின் பாதங்களின் மீது விழுந்தது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் காரியம், அவள் அவருடைய பாதங்களை துடைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். துடைத்துக் கொண்டிருக்கும் போது, அந்த கண்ணீர் கீழே ஊற்றி கொண்டிருந்தது. என்னே ஒரு ஆசீர்வாதம், சுத்தமான மனந்திரும்புதலின் கண்ணீர், மனந்திரும்புதலின் கண்ணீர், கீழே ஊற்ற, இயேசுவின் அழுக்கான பாதத்தை கழுவிக் கொண்டிருந்தாள்... ஓ தேவனே, இரக்கமாயிரும். செய்த செயலை எண்ணி வருந்தும் போது வரும் மனவருத்தத்தின் கண்ணீர், என்னே அழகான தண்ணீர், என்னே ஜொலிக்கும் தண்ணீர், அவளின் இருதயத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. "கர்த்தராகிய தேவனே, நான் நல்லவளல்ல, ஆனால் நீர் இந்தவிதமாக அமர்ந்திருப்பதை பார்க்கும் போது என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.” அந்த கண்ணீர் அவளின் கன்னங்களின் வழியாக ஊற்றிக் கொண்டிருக்கையில் அவள் அந்தவிதமாக அவருடைய பாதத்தை துடைத்துக் கொண்டிருந்தாள், அவளின் கண்ணீரினால் அவைகளை துடைத்துக் கொண்டிருந்தாள். அங்கே அந்த பரிமளத்தைல பரணி இருந்தது, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் காரியம், அவளின் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத நிலையில், அவளின் கூந்தல் கீழே விழுந்தது. அந்த சுருள் மயிர் கீழே விழுந்தது. அதை அவள் அறிவதற்கு முன்னரே, அவள் தன்னுடைய மயிரை எடுத்து, அவரின் பாதத்தை துடைத்தாள், அதாவது அவளின் தலையிலிருந்த மயிரினால். 57. தேவனே இரக்கமாயிரும். ஓ. என்னே, என் கர்த்தாவே, அந்த நெஞ்சில் ஈரமில்லாத பரிசேய கூட்டம் அக்கறை கொள்ளாமல் அங்கே அமர்ந்திருந்தது. ஓ என்னே, அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட பாதத்தை அவளின் தலை மயிரினால் துடைத்து கொண்டிருந்தாள்.. பெண்களே உங்களில் சிலர் அதை செய்ய வேண்டுமானால் நீங்கள் தலைகீழாக நிற்க வேண்டியிருக்கும். நீங்கள் உங்கள் மயிரை சுத்தரித்து கொள்கிறீர்கள். அது சரி. நான் நகைச் சுவைக்காக அதை கூறவில்லை. வேதாகமம் கூறுகிறது. 'ஸ்திரியின் மகிமை அவளின் தலை மயிரில் இருக்கிறது" என்று. ஆனால் நீங்களோ உங்களுடையதை கத்தரிக்கிறீர்கள். அது என்னவாயிருந்தது-? அது என்னவாயிருந்தது-? அது அவளின் மகிமையாயிருந்தது. அவள் தன்னிடமாக கொண்டிருந்த ஒரே ஒரு பண்பான காரியம் அவளின் நீளமான தலை மயிர் தான், அது மொத்தமும் இயேசுவின் பாதத்தில் விழுந்தது. அவளின் கண்ணீர், அவளிடமிருந்த எல்லாம். அவருடைய பாதத்தில் ஊற்றிக் கொண்டிருந்தது, இயேசுவின் அழுக்கான பாதத்தை கழுவிக் கொண்டிருந்தது. என்னே ஒரு வழி... அது ஒழுங்கு அல்ல என்பதை நான் அறிவேன். ஒழுங்கை பற்றி நீ எதற்காக கவலைபடுகிறாய்-? அந்த கூட்டத்துடன் சென்றது என்ன-? அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று நீ எதற்காக கவலைப்பட வேண்டும்-? நீ இயேசுவின் பிரசன்னத்தில் இருக்கிறாய். 58. பரிசேயர்கள் என்ன கூறுகின்றனர் என்பதை அவள் கவனிக்கவே இல்லை. இயேசு தன்னுடைய பாதத்தை பின்னாக இழுத்துக் கொண்டு கூறினாரா, "நீ அதை செய்யக் கூடாது என்று கூறினாரா, கூறினாரா, கூறினாரா-?” இல்லை, ஐயா, அவர் பரிபூரணமாக தரித்து இருந்தார். அவள் சரியான ஒழுங்கில் இருந்தாள், இயேசுவின் அழுக்கான பாதத்தை கழுவிக் கொண்டிருந்தாள், தன்னுடைய மனந்திரும்புதலின் கண்ணீரால், தன்னிடம் இருந்த ஒரே ஒரு மகிமையால், தலைமயிரினால் அவைகளை துடைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொன்றையும் அவருடைய விலையேறப் பெற்ற பாதத்தில் கிடத்தி விட்டாள். அவள், அவளாகவே இல்லை. அவள் கழுவிக் கொண்டிருந்தாள்; கிட்டத்தட்ட அவள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதை அவள் அறியாமலிருந்தாள், சிறிது நேரத்திற்கு பின்னர் அவள் எழுந்து நின்றாள். அவளுக்கு என்னவென்றே தெரியவில்லை... அவள் சுற்றியும் பார்த்தாள். ஓ சீமோன் எதையாகிலும் கூறினானா-? ஆம். ஓ, பின்னர் அவன் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்தான். அவனுடைய முகம் சிவப்பாய் மாறினதை என்னால் காண முடிகிறது. அவனுடைய ஸ்டீல் (steel) போன்ற கூர்மையான, தெய்வ பயமற்ற, பல்லி கண்கள் அவளை பார்வையாலே வெட்டிக் கொண்டிருந்தது. அவன் சிவப்பாய் மாறினான், பின்பு உக்கிரத்தால் அவன் முகம் வெளுப்பாயிற்று. அவன் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது, "ஹீம் ஹீம்-! ஹீம்-!" அவனுடைய நிகழ்ச்சி தடைப்பட்டு விட்டது. அவன் தன்னுடைய இருதயத்திலே கூறினான், "உங்கள் முன்னாள் நிற்பவள் எந்தவிதமான ஸ்திரி என்பதை அறிவீரா-?" அது அவருடைய நன்மதிப்பை கெடுத்து விடும் என்று அவன் எண்ணினான் 59. ஏன் சகோதரனே, இயேசுவின் நன்மதிப்பு அது அவர் பாவிகளின் பிரசன்னத்தில் இருக்கும் போது தான் உண்டாகிறது. இயேசுவின் நன்மதிப்பு பாவிகளால் பாதிக்கப்படுவதே இல்லை. அது பாவிகளுடைய பிரசன்னம் இருக்கும் போது தான் உண்டாகிறது. அங்கே அவருடைய பாதம் கழுவப்பட்டுக் கொண்டிருக்கிறது, அவள் எழுந்து நின்று, பரிமளத்தைல பரணியை எடுத்து, அவளிடம் இருந்த எல்லாமே அங்கு இருந்தது, அவளுடைய தலை மயிர் தொங்கிக் கொண்டிருந்தது, அவள் பரணியின் மூடியை சட்டென்று சுடக்கி, அதை உடைத்து, எல்லாவற்றையுமே ஊற்றினாள். கொஞ்சத்தை மாத்திரம் மழை காலத்திற்கென சேமித்து கொள்ளவில்லை; அவள் அதிலிருந்த எல்லாவற்றையும் அவரின் பாதத்தில் ஊற்றினாள். அவளிடம் இருந்த எல்லாவற்றையும், அவளுடைய மகிமையையும், தன்னையும், அவளின் மனந்திரும்புதலின் கண்ணீரையும் மற்றும் எல்லா பணத்தையும் மற்றும் அந்த நளத பரணியில் இருந்த எல்லா பரிமள தைலத்தையும், அவள், அவற்றை அவரின் பாதத்தில் ஊற்றினாள். ஓ தேவனே, தெய்வ பயமற்ற விறைப்பு நடைக் கொண்ட சந்ததியில் வாழும் எங்கள் மீது இரக்கமாயிரும், பரிசேயர்கள், பொழுது போக்கிலிருந்தார்கள். அவருடைய பாதத்தில் அது ஊற்றப்பட்டது... 60. உங்களுக்கு தெரியுமா சீமோன் கூறினான், "நீர் அறிந்திருந்தால்... இந்த மனிதன் தீர்க்கதரிசியாயிருந்தால், அவர் கூறியதை போன்று அவரால் தரிசனம் பார்க்க கூடுமானால், இந்த மனிதனால் தரிசனம் பார்க்க கூடுமானால், அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தால், எந்த விதமான ஸ்திரி தன்னுடைய பாதத்தை கழுவிக் கொண்டிருந்தாள் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்" என்றான். ஒ, நீ, குருட்டு மாய்மாலக்காரனே, இயேசு என்றால் என்னவென்பதை அறிந்து கொள்ள நீ அருவருப்பு உண்டாகுகிற அளவிற்கு நல்லவனாய் இருக்கிறாய் நீ அருவருப்பு உண்டாகுகிற அளவிற்கு நல்லவனாயிருக்கிறாய், நீ அதே விதமாகத்தான் அவரை உபசரித்தாய், அந்த காரணத்தால் தான் இன்றைக்கும் நீ இரட்சிக்கபடாமலிருக்கிறாய். அந்த காரணத்தால் தான் நீ பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெறாமலிருக்கிறாய், ஏனெனில் நீ அந்த விதத்தில் தான் அவரை உபசரித்தாய், வெட்கத்தோடு. ஓ, குருட்டு பரிசேயன், அங்கே அவன் தன்னுடைய எல்லா சுய நீதிகளையும் கொண்டவனாய் நின்றான், கூறினான், "அவர் ஒரு ஞான திருஷ்டிகாரராய் இருந்திருந்தால், அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்திருந்தால் அவள் எப்படிப்பட்ட ஸ்திரி என்பதை அவர் நிச்சயமாக அறிந்திருப்பார்". 61. என்னால் இயேசுவை காண முடிகிறது, அந்த வாசலுக்குள் அவர் நுழைந்ததிலிருந்து முதன் முறையாக சௌகரியமாக உணர்ந்தார். அவர் இருந்தார் -- பாவிகளை கவனித்துக் கொண்டு. அவர் எழுந்து நின்று கூறினார், "சீமோனே, நான் உன்னிடம் சிலவற்றை கூறவேண்டும். நான் உன்னிடம் சிலவற்றை பற்றி பேச வேண்டும், சீமோன். நான் உன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் போது..." ஓ தேவனே, "நான் உன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் போது," பரிசேயனே நான் எதை பற்றி பேசுகிறேன் என்பதை நீ காண்கிறாயா-?" "சீமோனே, நான் உன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் போது, நீ என்னுடைய கால்களை கழுவவில்லை. சீமோனே, நீ எனக்கு ஒரு போதும் எந்த ஒரு எண்ணெயையும் கொடுக்கவில்லை. சீமோனே, நீ ஒரு போதும் என்னை முத்தமிட்டு வரவேற்கவில்லை. நீ என்னை வரவேற்ற பிறகு இங்கே அமர்ந்திருக்கும்படி என்னை வெறுமனே விட்டு விட்டாய், என்னை இங்கே அழைத்து வந்தாய், என்னை அழைத்தாய். அதனால் நானும் வந்தேன், ஆனால் நீயோ எனக்கு என் தலைக்கு எந்த எண்ணெயையும் கொடுக்கவில்லை. மேலும் என்னுடைய கால்களுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. மேலும் நீ என்னை முத்தமிட்டு வரவேற்கவுமில்லை.” "ஆனால் இந்த ஏழை பெண்ணோ, எல்லா நேரங்களிலும் அவள் என்ன செய்து கொண்டிருந்தாள்-? [சகோதரன் பிரன்ஹாம் முத்தமிடும் ஒலியை எழுப்புகிறார்] அவருடைய பாதத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அல்லேலூயா, அவருடைய கால்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். கூறினார்" இந்த வீட்டிற்குள் அவள் வந்ததிலிருந்து." தேவனே இரக்கமாயிரும். கூறினார், "நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்." ஓ தேவனே, இன்றைக்கும் அதே விதமான வரவேற்பு என்னுடைய கர்த்தருக்கு கிடைப்பதை நான் நினைக்கும்போது, இதற்கு மேலும் என்னால் பிரசங்கிக்க முடியாது. 62. ஓ, என்னே, "இந்த ஸ்திரீயோ நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள். நீ என் கால்களை கழுவுவதற்கு தண்ணீர் ஏதும் கொடுக்கவில்லை; வரண்டு போன என் கைகளுக்கும், என் உதடுகளுக்கும் மற்றும் என் முகத்திற்கும் பூசிக் கொள்ள எனக்கு நீ எண்ணெய் எதுவும் கொடுக்கவில்லை, நீ என்னை முத்தமிட்டு வரவேற்று உன்னுடைய வீட்டிற்குள் நான் வரவேற்கப்படுகிறேன் என்று என்னிடம் கூறவில்லை. ஆனால் இந்த ஸ்திரியோ தொடர்ச்சியாக என் பாதத்தைக்கூட முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள்." ஓ, அவர் என்ன கூறினார் என்பதை கவனியுங்கள். அப்பொழுது அவர் சீமோனிடமிருந்து திரும்பி, இந்த பரிதபிக்கப்படத்தக்க நிர்பாக்கியமுள்ளவளை பார்த்தார், அவளின் தலை மயிர் தொங்கிக் கொண்டிருந்தது, கண்ணீரினால் நனைந்திருந்தாள், அவர்களின் வழியில் அவமானத்துடன் இருந்தாள். அவருடைய பாதத்தை முத்தமிட்டுக் கொண்டு இருந்ததாள், அவளின் இதழ்கள் அந்த நளதத்தினால் எண்ணெயாயிருந்தது, அவளின் கண்ணீர் சரமாரியாக அவளின் கன்னங்களிலிருந்து ஊற்றிக் கொண்டிருந்தது. அவர் கூறுவதை கவனியுங்கள், "உன்னுடைய திரளான பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது." ஓ, தேவனே. "உன்னுடைய திரளான பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது." 63. ஓ, தேவனே, இந்த மாறுபாடான சந்ததியே, கர்த்தர் உன்னுடைய வீட்டிற்கு வந்து கவனிக்கப்படவும், ஆராதிக்கப்படவும், மகிமைப்படவும் மற்றும் மேன்மைப்படவும் விரும்புகிறார் என்பதை உன்னால் காண முடியவில்லையா-? ஒ. தேவன் உன் மீது இரக்கமாய் இருக்கட்டும். நாம் ஜெபிக்கலாம்; ஒரு நிமிடத்திற்கு நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. ஏதோவொன்று என்னிடம் கூறுகிறது. "இப்பொழுது ஜெபி" என்று. தேவன், இயேசு, அழுக்கான கால்கள், இயேசு கவனிக்கப்படாதவராய் மற்றும் முத்தம் பெறாதவராய், இயேசு வரவேற்கப்படாதவரா.. இரக்கமுள்ள பிதாவே, இந்த நாளில் நீர் கீழே வருவீரா வந்து இந்த கூட்டத்தாருக்கு முன்னர் உம்முடைய இருதயத்தை காட்சிப்படுத்துவீரா, அதனால் அவர்கள் நீர் இன்னும் இயேசுவாகவே இருக்கிறீர் என்பதை அறிந்து கொள்வார்கள். உம்மை கவனிக்க அவர்கள் தவறி விட்டனர். அவர்கள் தங்களுடைய சிறிய காரியங்களை நேசிக்கின்றனர்; அவர்கள் தங்கள் குழுக்களையும் மற்றும் ஸ்தாபனங்களையும் நேசிக்கின்றனர். அவர்கள் சபையில் இருக்கும் தங்களுடைய சிறிய சமுதாய காரியங்களை, அவர்களின் பெண்கள் குழுக்களை மற்றும் தாங்கள் செல்ல விரும்பும் மற்றவைகளை அவர்கள் நேசிக்கின்றனர், மனிதர்கள் அவர்களுடைய சீட்டுக்கட்டு விருந்துகளை நேசிக்கின்றனர் மற்றும் அவர்களின் செயல்களை ஆனால் இயேசுவையோ கவனிப்பதில்லை. 64. ஓ கர்த்தாவே, என் பரிகாரியே, என் இரட்சகரே, என்னை காப்பவரே, ஓ தேவனே நான் எங்கே இருந்திருப்பேன் அது உமக்காக இல்லாமலிருந்திருந்தால்-? இன்றைக்கு குளிர்ச்சியாகவும் மற்றும் அலட்சியமாகவும் இருக்கும் இருதயங்களுடன் நீர் தயவு செய்து பேசும்; நீர் இங்கே அதே அன்பான கண்காணிப்போடு இருக்கிறீர் என்பதை இவர்கள் அறிந்து கொள்ளட்டும். நீர் கவனித்துக் கொண்டிருக்கிறீர். அலட்சியமாக தெருக்களில் மிக அதிக நேரம் சுற்றி திரிந்து, வீட்டிற்கு ஒருவன் வருவதை நீர் காண்கிறீர். என் சகோதரனே, எதற்காக நீ காத்திருக்கிறாய்-? நீ எதற்காக வெகு நேரம் தாமதிக்கிறாய்-? இயேசு உனக்கு கொடுப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார், அவருடைய பரிசுத்தப்படுத்தப் பட்ட சிங்காசனத்திற்கு அருகில் ஓர் இடம். உன்னுடைய அக்கிரமமான வழிகளை கைவிட மாட்டாயா-? உன்னுடைய சிறிய சுய கருத்தியல் யதார்த்தங்களை கை விட்டு இன்றே அவரிடம் நீ வரமாட்டாயா-? எத்தனை பேர், நாம் ஜெபிக்கும் போது, உங்களுடைய தலைகள் வணங்கியிருக்கிற வேளையிலே, நீங்கள் எழுந்து நின்று சொல்வீர்களா, "தேவனே, என் மீது இரக்கமாயிரும் என்று. நான் இன்றே வருகிறேன்; கர்த்தாவே, எதை வேண்டுமானாலும் செய்ய நான் ஆயத்தமாயிருக்கிறேன். இன்று நான் உம்மை என்னுடைய இருதயத்தில் என்னுடைய இரட்சகராக கவனிக்க விரும்புகிறேன். நான் உலகத்தினுடைய எல்லா காரியங்களையும் விட்டுவிட விரும்புகிறேன். உலகத்திலிருக்கும் எல்லா இன்பங்களையும் நான் விட்டுவிட விரும்புகிறேன். 65. உம்முடைய நன்மைகளால் நிறையப்பட நான் விரும்புகிறேன், அதாவது அது நீரே என்று நான் மட்டும் அறிந்து கொள்ளட்டும். நான் உம்மை வரவேற்றேன், ஆனால் நான் உம்மை திரும்ப அனுப்பி விட்டேன். நான் உமக்கு சேவை செய்வேன் என்று என்னுடைய குழந்தை மரித்த போது நான் உம்மிடம் கூறினேன். தாயார் இறந்த போது நான் கூறினேன், தகப்பனுடைய கல்லறையின் மீது மலர்களை வைத்த போது நான் கூறினேன். 'தேவனே, ஏதோவொரு நாளில் நான் உமக்கு சேவை செய்வேன் என்று.' ஆனால் நான் உம்மை அழைத்து திரும்பவும் அனுப்பி விட்டேன், ஆனால் இன்றைக்கு நான் வருகிறேன். சிறிது நேரத்திற்கு முன்பு போதகர் கூறின போது, அங்கே குழந்தை அல்லது மனைவி புதைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒரு சிறிய அடையாள கம்பத்தை நட்டு வைத்த, அந்த நாளில் நான் கூறினேன், கர்த்தாவே நான் உமக்கு சேவை செய்வேன் என்று. ஆனால் நான் ஒரு பரிசேயனாய் இருந்து விட்டேன், ஒரு நடிகனாய். நான் ஒருபோதும் உண்மையாகவே உம்மிடம் வரவில்லை. ஆனால் இப்பொழுதோ நான் வருகிறேன். கர்த்தாவே, நான் எழுந்து நிற்க போகிறேன், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை உமக்கு நிரூபித்துக்காட்ட நான் உம்மை குறித்து வெட்கப்படவில்லை. நீர் எனக்காக மிக அதிகமானதை செய்திருக்கிறீர். ஏதோவொரு நாளில் ஜீவியம் முடியும் போது, ஓ தேவனே, அந்த நாளில் அந்த விபச்சாரி நின்றது போன்று நானும் நிற்க விரும்புகிறேன். அவரிடம் பேச நான் விரும்பவில்லை; அவரிடம் பேசுவதற்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை. ஆனால் நான் கூற விரும்புகிறேன். இயேசுவே, உம்முடைய பாதத்தில் இருக்கும் அந்த வடுக்களை நான் முத்தமிட என்னை அனுமதியும், அனுமதிப்பீரா, இயேசுவே-? அந்த வடுக்களை மாத்திரம் நான் முத்தமிட அனுமதியும்; எனக்காகவே அவை அங்கே ஏற்பட்டது. ஓ தேவனே." 66. நான் ஒரு குழந்தையல்ல, ஆனால், ஓ. என்னே, உங்களை குறித்து உங்களுக்கே வெட்கமாக இல்லையா-? என்னுடைய இயேசுவை நீங்கள் உபசரித்த விதத்தை குறித்து உங்களுக்கு வெட்கமாக இல்லையா-? வெறுமனே சபைக்கு சென்று சேர்ந்து மட்டும் விட்டு ஒரு போதும் மனந்திரும்புதலே அடையாமல் இன்னுமாக உலகத்தின் காரியங்களை நீங்கள் விரும்புகிறீர்கள், இன்னுமாக பழைய உலக பொழுது போக்குகளை எடுத்து அதில் மகிழ்ச்சி கொள்கிறீர்கள். ஓ. மறுபடியும் பிறப்பது என்றால் என்ன என்பதை பற்றி நீங்கள் அறியவில்லை. ஐக்கியம் கொள்வது என்றால் என்ன என்பதை பற்றி நீங்கள் அறியவில்லை. ஓ. நீங்கள் தேவையான அளவு நல்லவராய் இருக்கின்றீர்கள் என்று நினைத்து கொள்கிறீர்கள், ஆனால் நீங்கள் அப்படியில்லை. அது நீங்கள் எவ்வளவு நல்லவராயிருக்கிறீர்கள் என்பதில் அல்ல; அது அவரை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதிலிருக்கிறது. நீங்கள் அவரை நேசித்தால்; அவருடைய கற்பனைகளை நீங்கள் காத்துக் கொள்வீர்கள். தேவனுக்கு சாட்சியாக இப்பொழுது நீங்கள் எழுந்து நிற்பீர்களா-? “கர்த்தராகிய இயேசுவே, நான் ஒரு மாய்மாலக்காரனாய், பழைய பரிசேய நடிகனாய் நான் மதத்தில் சேராமல், ஆனால் சேர்ந்தவனை போல் இருப்பதால் சோர்வடைகிறேன், இப்பொழுதே நீர் என்னுடைய இருதயத்திற்குள் வரவேண்டுமென நான் விரும்புகிறேன். உம்மால் சரீர அமைப்பு உருக்குலைந்தவர்களையும், முடமானவர்களையும் அவர்களுடைய தூக்கு படுக்கைகளில் இருந்தும் சக்கர நாற்காலிகளில் இருந்தும் எழுந்து நடக்க வைக்க முடிந்தால், உம்மால் குருடர்களை பார்க்கவும், செவிடர்களை கேட்க வைக்கவும் முடிந்தால், நீர் தான் தேவன் என்பதை நான் அறிவேன். நீர் என்னுடைய இருதயத்தோடு பேசுகிறீர் என்பதை நான் அறிவேன்.” என்று கூறுங்கள். 67. இப்பொழுது நீங்கள் எழுந்து நிற்பீர்களா, மனிதனோ அல்லது பெண்ணோ, சிறுபையனோ அல்லது சிறு பெண்ணொ கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்வதற்கு-? இங்கே என்ன காரியம்-? ஏதோவொன்று தவறாயிருக்கிறது. எனக்கு அது தெரியாது என்று என்னிடம் கூறாதீர்கள். என்ன காரியமென்று உங்களுக்கு தெரியுமா-? உங்கள் பக்கத்திலிருப்பவர் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்று நீங்கள் பயப்படுகிறீர்கள். யாரோ ஒருவர் ஏதோ ஓன்றை சொல்லி விடுவார் என்று நீங்கள் பயப்படுகிறீர்கள். இயேசு என்ன சொல்லப் போகிறார்-? உங்களுடைய இருதயத்தில் இயேசு கவனிக்கப்படாமல் இருக்கிறார். தோழனே, இதுவே உனக்கான கடைசி மணி வேளையாயிருக்கலாம். சகோதரியே, இதுவே உனக்கான கடைசி மணிவேளையாய் இருக்கலாம். இயேசு அருகிலிருக்கிறார், இன்று அவர் முத்தமிடப்படாமலிருக்கிறார். சபையானது அவரை பற்றி அலட்சியமாயிருக்கிறது. கடந்த இரவு அவர் கீழே வந்து உங்களுடைய எல்லா வியாதிகளையும் மற்றவைகளையும் குணமாக்கினார், அவர்களை குணப்பட்டவர்களாகவும் சுகமானவர்களாகவும் வீட்டிற்கு அனுப்பினார், அவர் இங்கே மேடையிலிருந்தார் என்று உங்களுக்கு காண்பிக்க கீழே வந்து மகத்தான அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தார், அதுவும் இங்கே இந்த மைதானத்தில் இருக்கும் சின்ன இடத்தில் தன்னுடைய வார்த்தையின்படி அவர் இங்கே இருக்கிறார் என்பதை நிரூபிக்க மகிமையிலிருந்து கீழே இறங்கி வந்தார். ஆனால் இன்றோ, நீங்கள் அவரை கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள். "ஓ, மாறாக நான் என்னுடைய விருந்திலிருப்பேன்." 68. பரிசேயனாகிய சீமோன் இன்றைக்கு அவன் இருக்கும் நரகத்திலிருந்து என்ன சிந்தித்துக் கொண்டிருப்பான்-? அவன் அந்த சிறிய விருந்தை திரும்பவும் நடத்த விரும்பியிருப்பான் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். அது மாறுபட்டதாயிருக்கும் என நான் கற்பனை செய்து பார்க்கிறேன். சீமோன் தேம்பி தேம்பி அழுவான், "ஓ இயேசுவே, நான் உம்முடைய கால்களை கழுவுகிறேன்" என்று. இன்றிலிருந்து ஒரு வருடம் கழித்து, இன்றைக்கு இங்கே அமர்ந்திருக்கும் ஜனங்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், இன்றிலிருந்து ஒரு வருடம் கழித்து, ஏற்றுக் கொண்டு இருந்திருக்கலாமே என்று விரும்புவீர்கள். நீங்கள் கூறுவீர்கள், ஓ இயேசுவே, நான் அந்த சிறிய கூடார மைதானத்திற்கு திரும்ப செல்லுவேனானால். ஓ இயேசுவே அந்த போதகருடைய அழைப்பை திரும்பவும் கேட்பேனேயானால், இயேசுவே, நான் எழுந்து இருப்பேன், ஓ நான் எழுந்திருப்பேன்." மிகவும் காலம் தாமதமாகிவிட்டது, பாவம் உன்னை பிரித்து விட்டது. "கர்த்தாவே, அந்த நாள் மிக அதிக கன மழையாயிருந்தது என்பதை நான் நினைவு கூறுகிறேன்; ஜனங்களின் கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தது. நீர் எங்களை எவ்வளவாய் நேசித்தீர் என்றும் நாங்கள் எவ்வளவு அலட்சியமாய் இருந்தோம் என்றும் போதகர் சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் நான் -- நான் மாறுபட்டவனாயிருந்தேன், கர்த்தாவே." ஒரு முறை லாசரு அவனுக்கு பிரசங்கித்து முடித்தவுடன், அந்த ஐசுவரியவானுக்கு அது போன்ற ஓர் வேண்டுகோள் இருந்தது. 69. ஓ உங்களுடைய பயிர்கள் எல்லாம் சரியாக வளரலாம். ஒரு வேளை புகையிலையும் நன்றாக வரலாம், சோளம் முதிர்ந்ததாய் தொங்கலாம்.” ஓ. சகோதரியே ஒரு வேளை நாளைக்கு நீங்கள் துணி துவைக்க வேண்டியிருக்கும். ஒரு வேளை செவ்வாய் கிழமையில் நீங்கள் உங்கள் சங்கத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். அதில் ஒன்று கூட என் இயேசுவுடன் சம்பந்தப்பட்டதில்லை. அவருடன் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்-? உலகத்துடன் அவரை அமரும்படி விட்டுவிட்டு, அவர் மீது அழுக்கை போடுகிறாய். "அது முட்டாள்தனம்: அதை பற்றி ஒன்றுமே இல்லை. அது மனோவசியம்; அது பிசாசுடையது என்கிறாய்.” அவர் அந்தபடி அமரும்படி விட்டு விட்டு அதை குறித்து எதுவுமே செய்யாமல் நீ அமர்ந்து கொண்டு இருக்கிறாய். ஆனால் அது உனக்கும் தேவனுக்குமான காரியம். ஓ என் அன்பான சகோதரனே, எதற்காக நீ காத்திருக்கிறாய்-? நீ எதற்காக வெகு நேரம் தாமதிக்கிறாய்-? இயேசு உனக்கு கொடுப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார் அவருடைய பரிசுத்தப்படுத்தப் பட்ட சிங்காசனத்திற்கு அருகில் ஓர் இடம். எதற்காக நீ காத்திருக்கிறாய்-? இங்கே ஒரு மனிதனோ அல்லது பையனோ அல்லது பெண்ணோ இல்லையென்று என்னிடம் நீ சொல்ல நினைக்கிறாயா-? இங்கே அமர்ந்து கொண்டிருக்கும் நீ யார் என்பது எனக்கு தெரியும் என்பதை நீ அறிவாய். இங்கே பரிசுத்த ஆவியானவர் அசைவாடிக் கொண்டு இருக்கிறார் என்பதை நீ அறிவாய். இந்த ஜனக் கூட்டத்தை நான் காணும் போது உன்மீது இருள் தொங்கிக் கொண்டிருக்கிறது. நீ எங்கே அமர்ந்திருக்கிறாய் என்பதை நான் அறிவேன்; எனக்கே தெரியுமென்றால் எவ்வளவு அதிகமாக அவருக்கு தெரிந்திருக்கும்-? தேவன் உன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார் ஆனால் நீயோ உன்னுடைய குளிர்ந்த அலட்சியமான இருதயத்தை அவரை விட்டு விலக்குகிறாய், 70. நினைவில் கொள், நான் உனக்கு சொல்லுகிறேன். இதுவே கடைசி மணி வேளையாய் இருக்கலாம். "என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் வெறும் மாம்சந்தானே என்று பார்க்கும் போது நீங்கள் சுயாதீனமானவர்கள்; நீங்கள் விரும்பியதை நீங்கள் செய்யலாம். அதை ஏன் இன்றே செய்யக் கூடாது-? ஏன் உங்களுடைய ஆத்துமாவை எல்லாமறிந்த, நித்தியத்தை கரங்களில் வைத்திருக்கும் அவருடைய கரங்களில் ஒப்புக் கொடுக்கக்கூடாது-? உங்களை வழி நடத்த அவர்தான் சரியான ஒருவர். நீங்கள் எங்கே இருக்க வேண்டும் என்று உங்களை சரியாக பொருத்த கூடியவர் அவர் ஒருவர் மட்டும் தான். அவருடன் என் சந்தர்ப்பத்தை நான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். அதை செய்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன், மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் தலைகள் வணங்கியிருந்த போது நான் காலத்தை பார்த்தேன். அப்பா உங்களுக்கு தெரியுமா, தேவன் அவருடைய இருதயத்தை ஆசீர்வதிக்கட்டும், அவர் தன்னுடைய கடைசி ஜெபத்தை என் கையில் அவர் மரிக்கும் போது ஜெபித்தார். வயதான தகப்பனார் மிக அதிகமாக குடித்தார், அது நகரத்தில் மிகவும் அதிக அவமானத்தை தந்தது. அவர் அதை செய்த போது, குடித்துக் கொண்டு அப்படியாக சென்றதால், நகரத்தில் எங்களுடைய பெயர்கள் மிகவும் கெட்டுப் போனது. நான் பையனாய் இருந்த போது, நான் அங்கே வழக்கமாக நின்று யாரிடமாவது பேசுவேன், வேறு யாரவது வந்து விட்டால், அவர்கள் என்னை விட்டு விட்டு வந்தவரிடம் பேசுவார்கள். ஏனெனில் நானும் ஒரு பிரன்ஹாமாய் இருந்ததால். ஓ, தேவனே, அந்த பெயர் சாக்கடையில் இழுக்கப்பட்டிருந்தது. 71. மற்றுமொரு நாளில் என் மனைவியிடம் நான் கூறினேன், "தேனே இங்கே பார், இப்பொழுது என்னால் வீட்டிற்கு கூட வர முடியவில்லை. ஆப்பிரிக்காவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் உலகத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் ஜனங்கள் விடுதியில் அமர்ந்து கொண்டு, ஐந்து நிமிடத்திற்காக மன்றாடுகின்றனர். ஐந்து நிமிடத்திற்காக உலகத்தின் மூலையிலிருந்து வருகின்றனர். "நான் கூறினேன், "இனிய இருதயமே, எது அதை செய்தது என்னுடைய கல்வியல்ல. என்னிடம் எதுவுமே இல்லை; என்னுடைய தனித்தன்மையல்ல, என்னிடம் எதுவுமே இல்லை. எது அதை செய்தது-? இயேசு, அவரே அதை செய்தார்; அவரே அதை செய்தார்." அவர் தாவீதிடம் கூறினார், "தாவீது, நான் உன்னை ஆட்டு மந்தையை விட்டெடுத்து பூமியில் இருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன். என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி உன்னை ஆட்டு மந்தையைய் விட்டெடுத்தேன். தேவனே, இயேசுவே, நீ ஒன்றுமே இல்லாதவனாயிருந்தாய்; நான் உன்னை இரட்சித்து உன்னை என்னுடைய குமாரனாக்கினேன். நான் உன்னை இரட்சித்து உன்னை இராஜகுமாரன் ஆக்கினேன். நான் உன்னை இரட்சித்து உன்னை சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி அழைத்தேன்." ஓ இயேசுவே, ஓ உம்முடைய விலைமதிப்பில்லா வடுக்கள் கொண்ட பாதங்களும் கரங்களும், முட்களினால் அழுத்தப்பட்ட உம்முடைய புருவங்களும். ஓ, இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். 72. சிறிய பாவியான ஆண் குழந்தையாக, இங்கே இந்த சொந்த மண்ணில், சரியாக நான் பிறந்த இந்த மண்ணில் கர்த்தாவே. தயவு செய்து, அன்பான தேவனே, அலட்சியமாய் இருக்கும் இருதயங்களை அனலாக்கும், மகத்தான யேகோவாவே, அவர்களுடன் இரக்கத்துடனும் சமாதானத்துடனும் பேசும். ஏதோவொரு நாளில் நீர் வர போகிறீர். உம்முடைய கோபம் கடுமையாக இருக்கப் போகிறது. இன்னும் ஒரு விசை கர்த்தாவே, நான் அழைக்கிறேன், பின்பு உம்மிடம் ஒப்படைக்கிறேன். எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் நான் செய்து விட்டேன். உம்மை பற்றி நான் பேசினேன், கர்த்தாவே, நான் அழுகவும் செய்து விட்டேன், என்னால் நிறுத்த முடியவில்லை. நீர் சில பாவிகளை அனுப்ப மாட்டீரா, கர்த்தாவே, எழுந்து நின்று, "இப்பொழுது, கர்த்தாவே, நானும் கூட உம்முடைய பாதத்தண்டை நிற்கிறேன். பரிசேயர்கள் என்ன கூறுகின்றனர் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. மற்றவர்கள் என்ன கூறுகின்றனர் என்று எனக்கு கவலையில்லை. நான் உம்மிடம் வருகிறேன். என்னுடைய சபையில் நான் ஒரு உண்மையான கிறிஸ்தவனாய் இருக்கப்போகிறேன். நான் உம்மை நேசிக்க போகிறேன், நான் உமக்காக சேவை செய்யப் போகிறேன் மேலும் நான் மற்ற பாவிகளை உம்மிடத்தில் கொண்டு வர போகிறேன்." என்று கூறுவதற்கு. அதை அருளும், கர்த்தாவே, அதை அருளும், தயவு செய்து அருளமாட்டீரா-? 73. நான் எல்லாவிடங்களிலும் பார்க்கிறேன் ஒருவருமே நிற்கவில்லை. ஓ தேவனே, என் அன்பார்ந்த கென்டக்கி ஜனங்களே, உங்களில் பலர் என்னை போன்றே ஏழ்மையானவர்கள், இங்கே ஒரு சிறிய அற்பமான ஜீவியத்தில், காலை உணவிற்கு ஒரு துண்டு பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியும், சோள ரொட்டியுடனும் வளர்க்கப்பட்டேன். இந்த உலகத்தில் உங்களுடையது என்று எதுவுமே இல்லை. ஆனால் இன்று உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக ஆகும்படி ஏன் நீங்கள் அதை செய்யக்கூடாது-? எப்படியாயினும் நீ யார்-? அந்த சிறிய பழைய தோட்டம் எவ்வளவு தேறும்-? நீ மரித்து அதை விட்டுவிட போகிறாய். அந்த சிறிய கடையை பற்றி என்ன, உனக்கிருக்கும் அந்த சிறிய சமுதாய கெளரவம் தான் என்ன-? ஏதோவொரு நாளில் அவர்கள் உன்னை அந்த மலை பக்கமாக தூக்கி சென்று ஒரு குழியில் போட்டு, உன் மீது மண்ணை போடுவார்கள் என்பதை நீ உணர்ந்து கொள்ளவில்லையா இன்றைக்கு நீ இயேசுவை நிராகரிப்பாயென்றால் உன்னுடைய ஆத்துமா எங்கே இருக்க போகிறது-? ஒரே ஒரு ஊற்று தான் உண்டு, அது மட்டும் தான் உன்னை இரட்சிக்க முடியும், உன்னை குணமாக்க முடியும், உன்னுடைய பாவத்தையும் அவமானத்தையும் எடுக்க முடியும், உன்னை ஒரு சபை அங்கத்தினனாக்குவதற்கு பதிலாக உன்னை ஒரு கிறிஸ்தவனாக மாற்றும்... நீ ஏன் அதை செய்ய கூடாது-? 74. பரலோக பிதாவே, இன்று இங்கே இருக்கும் இந்த கூட்டத்தாருக்கு, உம்முடைய வார்த்தையின் படியே, நித்தியத்தை, தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நித்திய ஜீவனை வழங்கினேன். அவர்களுடைய இருதயத்தை பற்றி எனக்கு தெரியாது, ஏன் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லையென்று. ஜனங்களின் மீதாக கருமையும் இருளும் தொங்கிக் கொண்டிருப்பதை நான் தரிசனத்தில் பார்த்தேன். பிரசங்கம் நடந்து கொண்டிருக்கும் வேளையிலே -- அவர்கள் இருந்த போது, அவர்கள் சரீரப்பிரகாரமாக கூட சுகமடைவதை நீ கண்டும் அறிந்தும் இருக்கிறாய். உம்முடைய பிரசன்னம் இங்கே இருந்தது; இன்னுமாக அது இங்கே இருக்கிறது. ஏன் ஜனங்கள் உம்மை ஏற்றுக் கொள்வதில்லை, அது எனக்கு அப்பாற்பட்டது. என்னால் அதை புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஒரு வேளை அவர்கள் கோட்டை கடந்து விட்டனர். அங்கே அவர்களால் இனிமேல் அதை செய்ய முடியாது. ஒரு வேளை அவர்கள் அதை முன்னரே கேட்டிருக்கக் கூடும். நீர் கூறினீர், "நான் மனுஷனோடே என்றைக்கும் போராடுவதில்லை" என்று. அது உம்மை சார்ந்தது. தகப்பனே, எனக்கு தெரியாது. அவர்கள் அனைவரையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். அவர்களில் ஒருவர் கூட இழக்கப்பட கூடாது என்று ஜெபிக்கிறேன். நீர் செய்த சகலத்திற்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். அவர்கள் அனைவரையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், பிதாவே. 75. இன்றிரவு, இந்த பட்டணத்தின் ஊழியக்காரர்களை ஆசீர்வதியும். அவர்களில் பலருக்கு கூட்டங்கள் இருக்கும். உம்முடைய அன்பும், இரக்கமும் அவர்களை சென்றடையட்டும், பிதாவே, இங்கே இருக்கும் சிலரும் கூட, இன்றிரவு அவர்கள் தங்களுடைய சொந்த சபையில் கலந்து கொண்டு, அவர்கள் எழுந்து தங்களுடைய சொந்த சபையின் பீடத்தண்டைக்கு வரட்டும். அதை அருளும், கர்த்தாவே, அவர்கள் மிகவும் கடிந்துக் கொள்ளபட்டவர்களாய் உணராதபடி அதாவது ஏதோ ஓரிடத்திற்கு சோளம் வைக்கும் அறைக்கோ, படுக்கை அறைக்கோ சென்று, மனைவி மற்றும் பிள்ளைகளிடம், உள்ளே வந்து, "தேனே, என்னால் அதிலிருந்து வெளிவரவே முடியவில்லை" என்று கூறும் வரை அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்கட்டும். ஒரு வேளை நாளைய தினம் அவர்கள் சோள வயலில் இருக்கையில் அல்லது புகையிலை வயலில் அல்லது இங்கு எங்கோ ஓரிடத்தில், சாலையில் டிரக்கை ஒட்டுகையில் அல்லது அவள் பாத்திரங்களை கழுவும் போது அல்லது படுக்கையை ஆயத்தம் செய்யும் போது, தேவனே, அது அவர்களுடைய இருதயங்களில் அடிக்கடி வந்து போகட்டும், தொடர்ந்து. இன்றிரவு தலையணை மிகவும் கடினமாயிருக்கட்டும். அவர்கள் சொப்பனம் கண்டு எழுந்திருந்து, "ஓ, நான் ஏன் இயேசுவை நிராகரித்து விட்டேன்-? அவர் அங்கே அமர்ந்திருப்பதை நான் கண்டேன், ஆனால் நான் அலட்சியமாக அவரை கடந்து வந்து விட்டேன்." அப்பொழுது அவர்கள் படுக்கையில் இருந்து எழுந்து வந்து மற்றுமொரு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொள்ளட்டும், பிதாவே. இங்கே இன்றிரவு எங்களுக்கு ஒரு மகத்தான ஆராதனையை அளியும். உம்முடைய ஆவி அனைவர் மீதும் இருக்கட்டும் மேலும் இன்றிரவு மகத்தான சுகமளித்தல்கள் நடைபெறட்டும். கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கையில் அதை அருளும், ஆமென். [ஒலிநாடாவில் காலியிடம்] 76. சிறிது நேரத்திற்கு முன்பு இயேசு உனக்கு சுகமளித்து விட்டார். என்று நான் கூறினால் என்ன செய்வாய்-? நீ அதை விசுவாசிப்பாயா-? நீ அதை விசுவாசிப்பாயா-? அந்த விதமாக உனக்கு இருந்த எல்லா பித்தப்பை காரியங்களும் உன்னை விட்டு போய் விடும்-? அது போய்விடும் என்று நீ விசுவாசிக்கிறாயா-? நீ விசுவாசிக்கிறாயா, எல்லாம் சரி. இப்பொழுது உனக்கு என்ன நடக்கிறது என்று பார். உன்னுடைய விசுவாசம் உன்னை சுகப்படுத்தியது. அவர் அன்பானவராய் இருக்கிறார், அவர் இங்கே இருக்கிறார். எத்தனை பேர் உண்மையாகவே, ஒருவேளை... எனக்கு தெரியாது... அவருடன் இன்னும் கொஞ்சம் நெருங்கி நடக்க விரும்புகிறீர்களா-? உங்களுடைய கரத்தை மேலே உயர்த்துவீர்களா-? "அவருடன் இன்னும் கொஞ்சம் நெருங்கி நடக்க விரும்புகிறேன்” என்று கூறுங்கள். "இன்னும் நெருங்கி நடக்க" என்ற பாடலை எங்களுக்காக இசையும். அவருடன் இன்னும் நெருங்கி நடக்க ....... *******